" ஒரே விசயத்துக்காக இரண்டு முறை கவலைப்படக்கூடாது!
”கணணிக்கு காரணியான நீ, இன்று அதற்கு தீனி’யாகி விட்டாய்! “
” காகித ரோஜாக்களைக்காதலித்து விட்டு, வாசமில்லை என்று வக்கீலிடம் செல்வதால் என்ன பயன்? “
"இருண்டு இருக்கும் வான மேகங்களுக்கு, இடியோடு மின்னல் வழி காட்டும்! “
”சில உணர்வுகள் கண்ணாடி போல! பட்’டென்று உடைந்து விடுகின்றன..சிறிய கல்லடி பட்டவுடன்! “
” மகரந்த சேர்க்கைளை விலக்கும் மலர்களும் உண்டோ? “
” கனவிலே சாதிச்ச திருப்தி’யோட காலைப்பொழுது புலர்கிறது! “
”பெண்ணியமும்,ஆணியமும் சந்தேக சக்கரகங்ளில் சிக்கி, சந்தோஷ ஊரைத்தொலைத்து விடுகின்றன!”
” நீ கிழக்கு திசையில் எவ்வளவு வேகமாக பயணித்தாலும், கிழக்கு திசையை பிடிக்கவே முடியாது! “
”ஏதாவதை தேடிட்டே இருக்கணும்! தேடாமல் இருந்தால், நாம் இருக்கறதே தெரியாம போயிடும்! நம்மளை யாரும் தேட மாட்டாங்களே!?”
என் நச்சரிப்பு தாங்காமல்தான், அவள் “இச்’ என்று ஒரு முத்தமிட்டாள்!# நச்’ கவிதை!
” குண குன்றுகளுக்குகூட, கோபம் என்று வரும்போது, மறை கழண்டுதான் போகிறது! “ #தத்ஸ்!
” நீ நொறுக்கு தீனி எம்புட்டு சாப்பிட்டாலும், குறுக்கு புத்திக்காரன்தான், குண்டாவான்! “
” எதையும் சாதிக்காதவனை சமூகம், லாவகமாக ‘அறிவு ஜீவி’
என்று விளிக்கின்றது! “
”கண்ணீர் என்பது பலவீனமானவர்களின், பலமான ஆயுதம்!”
சிலர் இருந்தும், இறந்தவர்களாகி விடுகின்றனர்! சிலர் இறந்தும் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்!
”அழகான பெண்களது செருப்புகளில் கூட ஆயிரம் கதைகள் மறைந்திருக்கும்! “
”அமெரிக்காவை கண்டுபிடிச்ச கொலம்பஸ் எங்கிருந்தாலும் வரவும்! ~ என்னோட டூத்-பிரஸைக்காணவில்லை! “
” கற்பு என்பதற்கு உண்மை எனும் அர்த்தத்தை வேறு அர்த்தம் புரிபடவில்லை! “