Popular Posts

Sunday, July 31, 2011

செத்தாலும் மாறாது!

ப்ரியா தலை கீழாகத்தொங்கிக்கொண்டிருந்தாள். 

உடல் கனமே தெரியவில்லை. 

செத்து போனது புரிந்தது. 

ஆனால் நினைவுகள் எதுவும் சாகவில்லை!

‘சாகாவரம் பெற்றது நினைவுகள் மட்டும்தானே!’

காற்று வேறு  ஜில்லென்று வீசிக்கொண்டிருந்தது.
அக்கம்பக்கம் பார்த்தாள்! ஆள் அரவம் எதுவும் இல்லை.

செத்து எத்தனை நேரம் ஆனது என்றும் புரியவில்லை. 

ஆனால் ஏன் செத்தோம்? எதற்கு செத்தோம் என்று நன்றாகத்தெரிந்தது.

தனது உடலை என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.

எரித்திருப்பார்களோ?

’என்ன இழவோ.. இப்பொழுது அதுவா முக்கியம்?’

’பிரகாஷ் ஏன் இன்னும் வரவில்லை?

இங்கே தன்னந்தனியே..  தனியாக..மயானத்தில் ஒரு பெண் பேயாகத்தொங்கி.கொண்டு..இருக்கிறாள்..

இவன் மட்டும் வழக்கம் போல.. ...ஏமாற்றி விட்டானோ? ’  பிரியா மனம் படபடத்தது!

"மறுபடியும் செத்து  மனிதர்களோடு சேர்ந்து கொள்ளலாமா?"

"சேச்சே..அது மட்டும் கூடாது..மனிதர்களா அவர்கள்?.."

பேய்கள்! ச்சீ.. நானே பேயாகிவிட்டேன்!

மனிதர்களோடு நம்மை சேர்த்தக்கூடாது..  கேவலம்! மகாக்கேவலம்!!

மனிதர்களை நினைத்தாலே அறுவெறுப்பாக இருந்தது.

’என்ன ஜென்மங்களோ?

எப்படித்தான்  பிழைக்கிறார்களோ?’

நல்லவேளை..நான் தப்பித்துகொண்டேன்.

நிம்மதியாக மூச்சு விடப்பார்த்தாள் பிரியா!

மூச்சுத்தான் நின்று விட்டதே!  எப்படி விடமுடியும்?

சீக்கிரம் இந்த மனிதப்பழக்கங்களை,
மறந்து விடவேண்டும் என எண்ணிக்கொண்டாள்!

மறுபடியும் பிரகாஷ் நினைப்பு வந்தது.

இந்த நா(பே)ய் ஏன் இன்னும் வரவில்லை?

"நாய்.." என்று அவனை சொல்லிப்பார்க்கும் போது சிரிப்பு வந்தது.
வாலாட்டிக்கொண்டு..."பௌ..பௌ" தன்பின் வருவது போல் கற்பனை செய்து பார்த்தாள்!

புன்னகைசெய்து கொண்டே.. அந்த மரத்திலிருந்த ஒரு கிளையைப் பிடித்து..
"விஷ்" என்று தாவிப்பிடித்தாள் மறு கிளையை..

இதை மட்டும் அம்மா பார்த்தால், "பொட்டை புள்ளைக்கு இது ஆகாது"
என்று கரடியாய்க்கத்துவாள்.

பெண்களை அடைக்கி வளர்ப்பதனால் தானோ பெண்குணம் வந்து விட்டதுவோ?

பசங்களுக்கு ஒரு கட்டுபாடுமில்லை.. அதனால் தான் பய புள்ளைக..பயமில்லாம
திரியறானுக! - பிரியா கோபத்தோடு அந்த மரக்கிளையைப் பிடித்து உலுக்கினாள்.

பெண்னாக வாழ்வதை விட, பேயாக
வாழ்வதில் எத்தனை இன்பம்? பல் துலக்கல், குளியல்..அலங்காரம்.
என்று எதுவும் தேவையில்லை!
குறிப்பா..இந்த அசிங்கபிடித்த.. ஆண்களின் வக்கிர பார்வை இல்லை.

இந்த பேய் சுதந்தரம் இனிமையாக இருந்தது பிரியாவுக்கு!

தான் சாகாமல், எத்துனை கஷ்டப்பட்டோம்
என்று நினைத்த பிரியாவுக்கு, உடல், அல்ல..அருவம் சிலிர்த்தது!

பிரகாஷும், தானும் தானே செத்தோம்?
இன்னும் அவன் மட்டும் வந்து சேரவில்லை?
ஒருவேளை, அவன் பிழைத்து அங்கேயே..மாட்டிக்கொண்டானோ?
பயமாக இருந்தது பிரியாவுக்கு.
இதைத்தான் பேய் காதல் என்பார்களோ?

இந்த கர்மம் பிடித்த காதல் மட்டும்
இல்லாமல் இருந்திருந்தால், மனிதர்களோடு மனிதராய்..
வாழ்ந்து தொலைந்திருக்கலாம் என்று பிரியாவின் மனதுக்கு பட்டது.

விஷ்-என்று வேகமாக ஒரு காற்று! யாரோ வருவது போல ஒரு
உணர்வு! அந்த பழைய உணர்வு! ஓ!..அவன்தான்! அவளுடைய ஆசைப்பிரகாஷ்!

அருவம்(பிரியாதான்) ஆரவாரித்தது!

வந்தது யார்? மனத்தைக் கொள்ளை கொண்ட பிரகாஷ் அல்லவா?

ஒரு மரக்கிளையில், ஸ்டைலாக, தாவி பிடித்து தொங்கினான் பிரகாஷ்.

”ஏண்டா..செல்லம்! இவ்வளவு லேட்?” -பிரியா சிணுங்கினாள்.

“ம்..ஸாரி.. பிரியா..என் உயிர் போக கொஞ்சம் லேட்டாகிவிட்டது!”

“க்கும்..நீ ஒழுங்கா, உருப்படியா எதைத்தான் செய்தே?”

“ஏய்..என்னது? நானும், நீயும் ஒண்ணாத்தானே தூக்கிலே தொங்கினேம்.
நீ.. பிஞ்சு உடம்பு. அதா..சீக்கிரம் செத்திட்ட!”

"No Excuse! பிஞ்சு உடம்பு..பிய்ஞ்சு போன உடம்புட்டு..ஏமாத்தாதே!
நாம சாகிற சமயம்தான், மாலாவும் செத்தாள்!  நீ அவ கூட பேசிட்டுதானெ வந்தாய்?”

-பிரியா பேயாய் சீறினாள்.

’பேயான பின்னரும் கூட, இந்த பெண் பேய்கள், எவ்வளவு, ஸார்ப்பா இருக்காங்க?’-பிரகாஷ்
வியந்தபடி,

“உன் தலை மேல..ஸாரி..தலைதான் இல்லையே? உங்கம்மா தலை மேல சத்தியம்!
நான் மாலாகிட்ட பேசல..பேசல..  நானே செத்து சுண்ணாம்பா வந்திருக்கேன்.
ஆசையாப்பேசாம..இப்படி எரிஞ்சு விழறயயே?”

- தன் கிளையிருந்து தாவி, பிரியாவின் கிளைக்கு வந்தான் பிரகாஷ்.

“எரிஞ்சுதானே வந்தாய் நீ!”-காதலோடு, நக்கலாய் பேய்சிரிப்பு சிரித்தாள் பிரியா!

’ஆ..இந்த சிரிப்புதானே நம்மை மயக்கி,  இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது?’

-காதலால் மயங்கிய பிரகாஷ், பிரியாவை எட்டிப்பிடிக்கப்பார்த்தான்.

பிடிக்க முடியுமா?

பேயை யாரால் பிடிக்க முடியும்???


முற்றும்!

இப்படிக்கு,
பேயன்புடன்
கருநாக்கு










6 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அய்யோ

சி.பி.செந்தில்குமார் said...

>>Your comment will be visible after approval.

saari சாரி.. நீங்க பிரபல பதிவர்னு தெரியாம கமெண்ட் போட்டுட்டேன்

gokul said...

ஹெக்கே..! பிக்கே..!

நானும் ஒரு பேய்தான்..!!

தாய்மனம் said...

உண்மையாக, நல்ல கற்பனை வளம் உங்களுக்கு இருக்கு. வாழ்க்கையின் சின்ன சம்பவங்களை சமமாக சேர்த்து அசத்தி இருக்கிங்க. எப்படி முடிக்க போறிங்க என்று நினைத்துக்கொண்டே படித்தேன் நல்லாவே முடித்து இருக்கிங்க # இதை படித்து யாரும், செத்து போனா ஜாலி, என்று தப்பு கணக்கு போடாமல் இருக்கணுமே ##

தாய்மனம் said...

உண்மையாக, நல்ல கற்பனை வளம் உங்களுக்கு இருக்கு. அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை அழகாக சமமாக சேர்த்து கதையை கொண்டு சென்று இருப்பது எனக்கு பிடித்தது # கதையை எப்படி முடிப்பிங்க என்று பாத்தால் அதுவும் நல்லாவே இருந்தது. # இந்த கதையை படித்து, அட செத்தால் ஜாலியா இருக்கும் போல, என்று யாரும் சாகக்கூடாதே #

சு. திருநாவுக்கரசு said...

இந்தக்கதையை எப்படி முடிப்பது என்று எனக்குத்தெரியவில்லை! நீண்ட கதையாக்கினால், போரடிக்கும்! குழம்பிக்கொண்டு இருந்து போது திடீர் என்று உதித்ததுதான் முடிவு! ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்! தங்கள் பாராட்டுக்கு நன்றி!