Popular Posts

Wednesday, December 7, 2011

பிரிட்ஜ்(Bridge) ஒரு அறிமுகம்!

பிரிட்ஜ் (Bridge) விளையாட்டு என்பது ஒரு சீட்டாட்டம் தான்!
ஆனால் சூதாட்டம் அல்ல!
இங்கு பணத்துக்கு வேலையில்லை! தேவையும் இல்லை!
மூளையும் (அதற்க்கும் அவ்வளவாக அவசியம் இல்லை! ஆகவே பயப்பட அவசியப்படாது!) , வீட்டில் ஒரு மூலையும் இருந்தால் மட்டும் போதும்!
ஒரு சீட்டு கட்டில் மொத்தம் 52 கார்டுகள் உள்ளன! சரிதானே!

ஜோக்கர்கள் தேவையில்லை! (அதற்குத்தான் நாம் இருக்கிறோம் அல்லவா!)

இந்த விளையாட்டுக்கு, மொத்தம் நாலு பேர் வேணும்!
இது ஒரு கூட்டுக்களவாணி ஆட்டம்!
அதாவது உங்களுக்கு ஒரு பார்ட்னர் வேண்டும்!
அவரும், நீங்களும்தான் சேர்ந்து ஆட வேண்டும்!
(இதனால் பல சண்டைகள் மூளும்! ஆனால் போகப்போக பழகி விடும், இல்-வாழ்க்கையைப்போல!!!)

ஆற அமர நாலு சேர்’ வேண்டும்!
பிளாஸ்டிக் சேர்’ராக இருந்தாலும் பரவாயில்லை!
நடுவில் ஒரு குட்டி(யூண்டு) டேபிள்! புது சீட்டுக்கட்டு!
அம்புட்டுதான் தேவை!

உங்களுக்கு எதிராக உங்கள் பார்டனர் அமர்ந்துகொள்வார்!
இடப்பக்கமும், வலப்பக்கமும் எதிரிகள் அமர்ந்துகொள்வார்கள்!
இது வரை புரிந்ததா?

சரி! இப்பொழுது, உங்கள் கையில்  ஒரு புது சீட்டுக்கட்டு இருக்கிறதா?
இனி ஆட்டத்தை (கற்றுக்கொள்ள) ஆரம்பிக்கலாம்!

அதாவது உங்களை குழப்ப நான் தயாராகிவிட்டேன்! நான் ரெடி! நீங்க ரெடியா!
சீட்டுகளை, நன்றாக கலக்கி, ஆளுக்கு 13 கார்டுகளாக போடவும்!
சரி சமமாக!  4 *13 = 52!
இப்பொழுது, இந்த நான்கு பேருக்கு என்ன பெயர் வைப்பது?
இவன், அவன், இங்கி, பாங்கி...அப்படியல்ல!
North, West, South and East என்றுதான் அழைக்கணும்!

நார்த்’தும், சவுத்தும் பார்ட்டனர்கள்! 
ஈஸ்ட்டும், வெஸ்ட்’டும் பார்ட்டனர்கள்!
(தேச ஒற்றுமை வளர்கிறது பார்த்தீர்களா?)

முதலில், சீட்டுகளை, பிரித்துப்போடுபவர், டீலர் (Dealer) எனப்படுவார்!
சரீ..இப்ப நாலு பேருக்கும் தலா 13 கார்டுகள் தந்தாச்சு!
அதை வைச்சுட்டு இன்னா செய்யறது? என்று நீங்கள், திருதிரு’என்று முழிப்பது நன்றாகவே தெரிகிறது..
இப்பத்தான்.. பாய்ண்ட்’ கௌவுண்டிங்’ சிஸ்டம் வருது!!

சீட்டு கட்டிலே, என்னென்ன இருக்கு?
ஸ்ஃபேடு.. இது தான் கறுப்பா, S இப்படி இருக்கும்!
அடுத்து ஹார்ட்ஸ்! 
அது இப்படி H இருக்கும்!
அப்புறம்...டைமண்ட்ஸ்!  அது தான் Dஇது!
..ம், அப்புறம் இன்னொன்னு இருக்குமே?
வாவ்! நீங்க புத்திசாலிதான்! 
அதை க்ளஃப்ஸ் C என்பார்கள்!

இதிலே,  S,H இதை, இரண்டையும், மேஜர்’ன்னு சொல்வாங்க! 
அதாவது அப்பா டக்கர் ஜாதியாம்!
D , C, இந்த இரண்டும் மைனராம்! ஆக, ஸ்பேடு,ஹார்ட்ஸ்’களை, மேஜர் சூட்’ என்பர்.டைமண்ட்,க்ளப்’ஸ்களை, மைனர் சூட் என்பர்!
அது ஏன்? எதற்கு என்பதைப்பற்றி பின்னர் பார்ப்போம்!

தற்சமயம், நமது வசதிக்கு, S for Spade, H for Hearts, D for Diamonds and C for Clubs என்றே
குறிப்பிடப்போகிறேன்!
சரி! இப்பொழுது உங்களுக்கு நான் 4 கார்டு தர்றேன்! 
அவை, S-2, H-2, D-2 & C-2! Ok?
இந்த 4 கார்டுகளில் எந்த கார்டு பெரியது?
‘எல்லா கார்டுகளும், ஒரே சைஸ்’தானே என்று கடிக்கவேண்டாம்!
S-2 தான், இவற்றில் பெரியது!
அதன் பின்,  H-2,D-2 & C-2 என்று வரிசைப்படும்!

சீட்டுக்கட்டில், தலா ஒரு சூட்’க்கு, 13 கார்டுகள் உள்ளன!
2,3,4,5,6,7,8,9,10,J,Q,K,A என்பன ஆகும்!
இதில், 2,3,4,5,6,7,8,9,10 இவற்றை நம்பர் கார்டு என்றும், J,Q,K,A இவற்றை பிக்சர் கார்டு என்றும் சொல்வர்!
சரி! உங்கள் கைகளில், 13 கார்டுகள் உள்ளன அல்லவா?
அதைப்பற்றி நீங்கள் ஒரு சிறு குறிப்பு சொல்லவேண்டும்.. அதாவது, நீங்கள்தான்,
Opening Bidder!
ஏலம் என்பது இனி ஆரம்பமாகும்!
நீங்கள் சொல்வதை, மற்ற மூவரும் கவனமாக கேட்டு,
அவர்களும், உங்களை அடுத்து, Bidding  கோதாவில் இறங்குவார்கள்!
இந்த Bidding முடிந்தபின்னர், அதாவது, யார் பிட்டிங்’கில், அதிகம் சொல்கிறார்களோ,
அவர்தான் Declarer! அவரது, பார்ட்டனர் டம்மி என அழைக்கப்படுவார்!
உங்கள், இடப்பக்க,வலப்பக்க நண்பர்கள், Defenders என அழைக்கப்படுவர்!
இதுவரை, உங்களுக்கு புரிந்து விட்டதா...?

அதாவது, பிரிட்ஜில் 3 ஸ்டேஜ்!
1. Bidding
2. Play
3.Scoring and finding your rank!

நாம் முதல் ஸ்டேஜில், ஆரம்பத்தில் உள்ளோம்! அங்குதான், கொஞ்சம் அதிகமான விஷயங்கள் உள்ளது. இந்த Bidding செய்வதற்குமுன்னர்..உங்கள் கைகளில் 13 கார்டுகளைப்பற்றி, ஒரு குறிப்பு சொல்லவேண்டும் என்று சொன்னேன் அல்லவா?
அதற்கு என்று ஒரு மொழி உள்ளது!!!
அந்த மொழியைக்கற்பதுதான், நமது அடுத்த வேலை!
அதற்கு பாய்ண்ட் கவுண்ட்’ ஸிஸ்டம் தெரிஞ்சாகணும்!
தெரிஞ்சிட்டா போச்சு’னு நீ தைரியமா சொல்லறது எனக்கு புரியுது!
உங்க கிட்ட எனக்கு பிடிச்சதே அந்த வீராப்புதான்!
அது சரி!
2,3,4,5,6,7,8,9,10-இவ்வகை கார்டுகளுக்கு
எந்த பான்ய்ட்டும் கிடையாது!
J =  ஒரு பாய்ண்ட்
Q= இரண்டு பாய்ண்ட்
K= மூன்று பாய்ண்ட்
A= நான்கு பாய்ண்ட்
அம்புட்டுதான்!
உங்க கை’யிலே 13 கார்டுகள் தந்தாச்சு!
அவைதான் இது!
S K 10 3
H Q J 10 4
D A 9 3
C K 9 2
இப்ப எவ்வளவு பாய்ண்ட்’னு சொல்லுங்க!!
3+2+1+4+3=13! ஓ.கே!

ஒரு சீட்டு கட்டிலே, 4-A,4-K,4-Q,4-J இருக்கின்றன!
ஆக, மொத்தமா 40 பாய்ண்ட்’கள் தான் இருக்கு!
அதைக்கணக்கு வச்சுதான் பிட்டிங் (Bidding) நகரும்!


S A K 2
H Q J 10 3
D 5 3
C K 9 4 3
S Q J 8 3
H 8 5 4
D A 10 8 7 4
C 10
TableS 10 5 4
H 6
D Q J 9 6
C Q J 7 6 5

S 9 7 6
H A K 9 7 2
D K 2
C A 8 2
இப்ப நார்த்’தோட கையிலே எம்புட்டு பாய்ண்ட்டு?
13 கரீட்டுங்களா?
ஸவுத்’தோட கையிலே பாய்ண்ட்டு = 14
ஈஸ்ட்’டோட கையிலே  பாய்ண்ட்டு = 6
வெஸ்ட்’டோட  கையிலே பாய்ண்ட்டு = 7
ஆக மொத்தம் 40 வந்தாச்சு!

இப்படித்தான், கையிலே கார்டு தந்த உடன், டக்’னு எம்புட்டு
பாய்ண்ட் வந்திருக்கு எண்ணி (தப்பில்லாம..) மனசுலே வச்சுகணும்!
யாருக்கும் சொல்லக்கூடாது!
அடுத்து நீங்க கவனிக்க வேண்டியது...உங்களுக்கு
தந்த கார்டுகளின், டிஸ்ட்ரிபூஸன்!
அதென்னதா??? சொல்லறன் சாரே!

கீழே தந்துள்ள நார்த்-கார்டுகளை கவனிங்க!

S A K 2              = இந்த ஸூட்’லே 3 கார்டுகள்
H Q J 10 3         = இந்த ஸூட்’லே 4 கார்டுகள்
D 5 3                 = இந்த ஸூட்’லே 2 கார்டுகள்
C K 9 4 3           = இந்த ஸூட்’லே 4 கார்டுகள்



இப்பொழுது, இந்த கார்டுகளின் டிஸ்ட்ரிபூஸன் 3-4-2-4! 
பாய்ண்ட்’கள் =13, டிஸ்ட்ரிபூஸன் 3-4-2-4!
இதை நல்லா ஞாபகம் வச்சுக்கணும்!
நல்ல பிரிட்ஜ் பிளேயர், ஒரு வருஷம் கழிச்சு கேட்டாலும் சரியாக சொல்வர்!
நீங்க எப்படி, பாய்ண்ட் + டிஸ்ட்ரிபூஸன’களை கவனிச்சு
மனசுலே வச்சிருக்கீங்களோ.. அதே மாதிரி. மற்ற 3 பேரும் அதைச்செய்வர்!
அதாவது, அவங்க, அவங்க கார்டுகளை!
உங்க கார்டுகளை ரொம்ப பெருந்தன்மையாக மற்றவங்களுக்கு
காட்டக்கூடாது! அது அழுகுணி ஆட்டம்!
அப்படியே ஏதாவது அடுத்தவங்க கார்டு, உங்க கண்ணிலே,
பட்டாலும், அந்த விஷயத்தை நீங்க மனதார பயன்படுத்தக்கூடாது!
பிரிட்ஜ்’ என்பது, கற்றவர்களின், மிக ஒழுக்கமான விளையாட்டு.
இதில் ஏதாவது, குண்டக்க மண்டக்க’ என்று செய்தால்,
மிகுந்த அவமானப்படுவீர்கள் என்பதையும் சொல்லி விடுகிறேன்!
இப்ப நாலு பேரும் BIDDING செய்ய தயார் ஆகிட்டீங்க!
இந்த பிட்டிங்’கில் நீங்க பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளையும்
சொல்லிவிடுகிறேன்!
1 Clubs, 2 Clubs,3 Clubs,4 Clubs,5 Clubs,6 Clubs,7 Clubs
1 Diamonds, 2 Diamonds,3 Diamonds,4 Diamonds,5 Diamonds,6 Diamonds,7 Diamonds
1 Hearts, 2 Hearts, 3 Hearts, 4 Hearts, 5 Hearts, 6 Hearts, 7 Hearts
1 Spades, 2 Spades, 3 Spades, 4 Spades, 5 Spades, 6 Spades, 7 Spades
1 No Trumps, 2 No Trumps, 3 No Trumps, 4 No Trumps, 5 No Trumps, 6 No Trumps, 7 No Trumps
மற்றும் Pass,Double & Re-Double என்ற மூன்று வார்த்தைகளையும்
பயன்படுத்தலாம்!
ஆக மொத்தம் 38 வார்த்தைகளைத்தான் நீங்க பிட்டிங்’கில் பயன்படுத்தலாம்!

இந்த பிட்டிங்’ ஏறு முகமாகத்தான் இருக்கவேண்டும்!

அதாவது, யாராவது, 3-க்ளஃப்ஸ் என்று சொன்னபின்னர்,
நீங்கள், 2 க்ளஃப்ஸ் என்று சொல்ல முடியாது!!!

அடுத்ததுதான் மிக முக்கியம்!
இந்த பிட்டிங்’கை செய்ய, நீங்கள், ஒரு பிட்டிங்’ சிஸ்டத்தைக்கற்று
கொள்ளவேண்டும்! பல சிஸ்டங்கள் இருந்தாலும், பெரும்பாலோனோர் விளையாடும்
SAYC - (Standard American Yellow Card System) எனப்படும், பிட்டிங்’ சிஸ்டத்தை,
நீங்கள் நிச்சயம் கற்றுக்கொள்ளவேண்டும்!
ஒரு லிங்’ தர்றேன்! அங்கு முயற்சி செய்து பாருங்கள்!
http://en.wikipedia.org/wiki/Standard_American அல்லது  http://www.cs.tut.fi/~jkorpela/sayc.html  
பின்பு ஏதாவது, டவுட்டு வந்தால், கமெண்ட்’டில் ஒரு கால் தரவும்!
பின்பு நான் வருகிறேன்! :)



 


-வளரும்

12 comments:

anandrajah said...

எனக்கு சுத்தமா புரியல..! வளப்பு அப்படி..!! சீட்டாடம்னாலே தப்பு தான்னு ஏறிப்போச்ச் மண்டையிலே..! நான் வெலடுவதாயிள்ளே..! ஆனா என் தர்ம பத்தினி இதில் கில்லாடி ...! (ஜோடி பாருங்க..! இதான் வாழ்க்கை..!!) நாலு பேரு வேணும்னு சொல்லீடீங்க.. இனி மச்சினிச்சிய தேட வேண்டியது தான்..!

சு. திருநாவுக்கரசு said...

மும்பையில் நிறைய பிரிட்ஜ் க்ளப்புகள் உள்ளது. கஷ்டப்பட்டு கற்றுக்கணும்! செஸ்’ஸை விட இந்த விளையாட்டு கடினமானது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்!

Itzpooraan said...

மிக அருமை! தமிழில் இது ஒரு முதல் முயற்சி என்றே கருதுகிறேன்! ஆவலுடன் எதிர் நோக்குகிறேன் அடுத்த பதிவை!

iyyanars said...

ஹா..ஹா..வித்தியாசமான முயற்சி...அப்படியே வேறு விளயாட்ட்களுக்கும் முயற்சி செய்யவும்!

கடைக்குட்டி said...

ivlo rules a???????

சு. திருநாவுக்கரசு said...

..ம்க்கும்! ரூல்ஸ் இன்னும் நிறைய இருக்கு! போகப்போக சரியாயிடும்! ஆனா கற்றபின்னர், நிறைய ஆனந்தம் காத்திருக்கு! குட் லக்!

Pulavar Tharumi said...

ஒரு விளையாட்டைப் பற்றி சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சிறு சிறு படங்களும் அவற்றை ஒழுங்காக அடிக்கியிருக்கும் பாங்கும் உங்களின் உழைப்பை காட்டுகிறது. வாத்துக்கள்!

anandrajah said...

அட... அருமையாய் இருக்கு.. ! ஆரம்பத்தில் எல்லோருக்கும் ஒரே விதமான பாயிண்ட்ஸ் கிடைக்காதா..?! நீங்கள் சொன்ன மாதிரி 13 கார்ட் எல்லோருக்கும் கிடைத்தால் பாயிண்ட்ம் ஒரே மாதிரி தானே கிடைக்கணும் ! இங்கே தான் கொஞ்சம் கன்பூசன்.

சு. திருநாவுக்கரசு said...

சீட்டு கட்டை(52 கார்டுகள்), நன்றாக குலுக்கி நாலா பிரிச்சு, ஆளாளுக்கு 13 கார்டு போடும் போது..உங்க கைக்கு எந்த மாதிரி கார்டுகள் வரும் என்பதை, ஆண்டவனாலும் கணிக்க முடியாது! உங்களுக்கு, கணிதம், வெல்லக்கட்டி மாதிரி பிடிக்கும், அப்படின்னா..இந்த தளத்திலே டீடைய்ஸ் இருக்கு! http://rpbridge.net/7z78.htm . உங்களுக்கு கிடைக்கும், 13 கார்டுகளில், 0 லிருந்து 37 பாய்ண்ட்ஸ்கள் கிடைக்கலாம். எந்த மாதிரி, distribution-லே கிடைக்கும்??? ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். ஒரு தபா வந்த 13 கார்டுகள், உங்க வாழ் நாளில் திரும்ப வராது! அதனால்தான், இந்த விளையாட்டுக்கு இம்புட்டு மருவாதை! :)))

Unknown said...

நல்ல எழுத்து நடை ,எனக்குப் புரிவது போல் இருக்கிறது ,நேரில் வந்தவுடன் கற்றுக்கொடுங்கள் ...

sankar said...

nalla muyarchi, sir pakkathila irukkum podhu kathukka mudiyala ippa net la parthu ennaiku nan kathukkarathu?

MUTHUDURAI said...

ஏலச்சீட்டு விளையாட்டு தெரிந்தால் சொல்லவும்