Popular Posts

Wednesday, May 15, 2013

மதுரை மெகா ட்வீட் அப்ஸ்! - வேண்டுகோள்!

2012-சென்னை, 2013-கோவை என்று இரண்டு மெகா ட்வீட் அப்ஸ் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளன.

சென்னை ட்விட் அப்பில் கலந்து கொண்டேன்!
செந்தில்நாதன் மற்றும் அவரின் நண்பர்களின் கடின உழைப்புடன்
விழா நடத்தப்பெற்றது!

பெரும்பாலும் இளைஞர்கள் மயம்!
மகிழ்ச்சிகரமாக நடந்த ட்வீட் அப் அது!

ஆனால், அந்த வருடம், 66-A விதியின் கீழ், விதி விளையாடி, ட்விட்டர்களில் இயல்பு தன்மையை சாகடித்து விட்டது.

கல்யாண வீடாக இருந்த ட்விட்டர், கண்ணீர் காடான வருடம் அது!

இளைஞர்கள் எல்லை மீறுவது இயல்பு என்றாலும், அவர்களை நெறிப்படுத்த அங்கு யாருமில்லாத காரணத்தால், ட்விட்டுலகம் சில பாதிப்புகளுக்கு உள்ளானது.

கோவையில் நடக்கப்பெற்ற, ட்வீட் அப்பில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

மும்பையிலிருந்து, பஸ்ஸில் பயணித்து, இந்த ட்வீட் அப்புக்காக வந்த நண்பர் மணியைக்கூட என்னால் சந்திக்க முடியவில்லை.

கலக்கல் கபாலி அவர்களும் வந்திருக்கின்றார்!

இவர்களை சந்திக்க முடியவில்லை எனும் ஆதங்கம் இருந்தாலும், இனி வரும் அடுத்த ட்வீட் அப்பை (மதுரை) மேலும் மெருகேற்றி,  மிக வெற்றிகரமாக நடத்த என் வாழ்த்துகள்!

மாநில அளவில் நடத்தப்படும் விழாக்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன.
1. ஆறு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடுதல்
2. திறந்த முறையில் நிதி ஆதாரம் சேர்ப்பு
3. விழா கமிட்டி மற்றும் பொறுப்புகள் ஒதுக்குதல்
4. பிரபலங்கள் பங்கேற்கும் அரசியல் கலக்காத, பொது விவாதங்கள்
5. மகளிர்களுக்கு என்று தனிப்பிரிவு
6. டவிட்டர் ரெஜிஸ்ட்ரேஷன் , வெரிஃபிகேஷன் மற்றும் அனுமதி சீட்டு
7. விழா முடியும் வரை, மது அருந்தாமை..

நான் கூறியவை சில உதாரணங்களே.

கோடு போட்டாலே, ரோட்டை போட்டு விடும் இளஞர்களுக்கு இவை போதாதா?

140 எழுத்துகளுக்கே பழக்கப்பட்ட உங்களுக்கும், எனக்கும்

நீண்ட விளக்கங்கள் தேவையில்லை!

ஆக..

மதுரை ட்வீட் அப்புக்கு குறைந்தது 500 பேராவது பங்கேற்க வேண்டும்!

பார்ப்போம்!

வாழ்த்துகள்!

அன்புடன்
திருநாவு