Popular Posts

Saturday, September 17, 2011

மங்காத்தா! - விமர்சனம்!!

 
தல!

வந்து ரொம்ப நாளாச்சு!

இப்ப எதுக்கடா விமர்சனம்ன்னு நீங்க நினைப்பது கொஞ்சங்கூட சரியில்லை!
அம்மா ஆட்சியை, ஆறு மாசம் கழிச்சுத்தான் விமர்சிப்பேன்னு கேப்டன் சொல்லல?
புது மருமகளை மாமியார் உடனேவா கொளுத்தறாங்க?

எதிலும் ஒரு எத்திக்ஸ் வேணும்!

அதனாலே..தும்பை விட்டு வாலைப்பிடிச்சுதான் இழுக்கணும்!
அதுதான் நம்ம ஊர் வழக்கம்.

சரி..மெயின் சப்ஜெக்ட்’க்கு வரலாம்!

தல..தான் ஹீரோ! (அது ஏன்னு புரியல?)

தனியா நின்னு..படம் முழுதும் தாக்(ங்)கறாரு!
நரைச்ச தல! அப்புறம் அந்த அழகான தொப்பை!
சைடு டிஷ்ஷா..திரு..திரு..த்ருஷா அக்கா!
க்ளாமராம்??
பேசாம ஒரு ’டெடிபேரை’ நடிக்கவச்சு இருந்திருக்கலாம்!
ஒட்டு முத்தமா ..ச்சீ மொத்தமா கலக்கிட்டாங்க!
கண்ணைமூடிட்டுக்கூட பார்க்கலாம்! அம்புட்டு அழகு!

டான்ஸு!!!  தல முகவெட்டை மறந்திட்டு..
டான்ஸ்-மட்டும் பாத்தாக்க..பாத்தாக்க..
பாத்தாக்க..(சொல்லிபுடலாமா?)
பாக்யராஜோட நேர்த்தி தெரியுது! 

ஊடால..அர்ஜுன் அங்கிள் வேற!
சண்டை போட ஒரு ஆள் வேணுமாம்!
பின்னி எடுக்கறார் மனுஷன்!
இவரு இந்த மாதிரி கூட நடிப்பாரா!?

இந்த சோனா-புகழ் வெங்கட் பிரபு,
இம்மாம் பெரிய கதையை கையிலெ
பிடிக்க முடியாம திணறியிருக்கார்!
அவருக்கு மூச்சு முட்டறது நல்லாவே தெரியுது!
செட்டுக கிட்ட சரியா வேலை வாங்க தெரியல :(

காமடி-ட்ராக், கட்டையிலே போக! கடுப்பா கீது..:(

அடுத்து ம்யூசிக்! (இதையும் விமர்சனிக்கனுமாம்!)
போனியம் ரேன்ஜுக்கு அடிக்கறாங்க..
ஆனா உள்ளூர் கூத்து சத்தம்தான் கேக்குது!
ஒரு பாட்டுகூட ஹிட்’டாகாதுன்னு
எதிர்-வீட்டிலே ’குஷி’யா பேசிக்கறாங்க :(

மொத்தமா சொன்னா....
நரையும், தொப்பையுமா வந்து
இமேஜ்..டேமேஜ் ஆயிடுச்சாம்!
(நான் சொல்லல..எதிராளி சதி!)

படம்-பார்க்க போனேன்! டிக்கெட் கிடைக்கல..
சரி..சும்மா ஏன் இருப்பானேன்?
அதான் இந்த விமர்சனம்!

அப்புறமா..இந்த படத்தை சன் டி.விலெ வரும்போது
பாக்கணும்!

மார்க் : Marked as seen!








2 comments:

Unknown said...

நல்ல நடை ,எனக்குப் பிடித்தது

சு. திருநாவுக்கரசு said...

நன்றி! :)