உன் ஜன்னலின் பின்னே..
தெறித்தது மின்னல்!
சப்தமற்ற இடியொன்று..
விழுந்தது என்மீது!
ஒற்றை பனைமரமாய்..
கருகியது மனது!
ஆனால்
விந்தையிலும் விந்தையது..
மலர்ந்ததுவோ ஒரு கனவு!
விழி மூடவும் நேரமில்லை!
விடிந்ததும் தெரியவில்லை!
பசியும் ருசியும்.. அறியா பொருளானதுவே!
சித்தனும் சித்தம் கலங்கி நின்றான்!
போன புத்தனும் திரும்பி வந்தான்!
நித்தம் நான் உன் பின்னே!
பித்தம் பிடித்தது போல் பெண்ணே!
உன் விழிகளில் வழிந்தன
ஆயிரம் மொழிகள்!
அம்மொழிகளில்..
நனைந்து மோக நதியாய்
வீழ்ந்தன ஒரு கோடி காதல் துளிகள்!