Popular Posts

Sunday, April 1, 2012

நான்!



சென்னையில், பழவந்தாங்கல் பக்கம்!
மத்திய அரசின் டெலி-காம் சர்க்கிளில் பணி!
வயது 21!
கோவைத்தமிழால், தாலாட்டுபட்ட நான்.
திடீரென தாக்கிய சென்னைத்தமிழால் திண்டாடிக்கொண்டிருந்த வேளை!
எல்லாம் புதிதாய் இருந்தது!
சம்பளம் குறைவுதான்!
 அலுவலக போட்டிகளில் பங்கு பெற்றேன்!
ஒரு நாடகம் போட்டேன்! கூட்டம் ஆர்ப்பரித்தது!
கவிதைப்போட்டியில் வெற்றி!
ஹை-ஜம்ப் போட்டியில் வெற்றி!
இளங்கன்றாய துள்ளி குதித்துக்கொண்டிருந்தேன்!
நான் இருக்கும் இடத்தில் சிரிப்பும், கும்மாளமும் கூடியே இருந்தது!
இயல்பான மொக்கை ஜோக்குகளை பூக்க வைத்து, சந்தோஷமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன!
குறுகிய காலத்திலே நண்பர்கள் பலர்  சேர்ந்துவிட்டனர்!
வாராவாரம் சாராயம் குடிக்க ஒருவன் கற்றுக்கொடுத்து விட்டான்!
பழவந்தாங்கல் ரயில்வே கேட் அருகேதான் கடை இருந்தது!
இப்போது அங்கே பாலம் கட்டிவிட்டாரகள்!
சிகரெட்டையே தொடாத நான்..பாக்கெட் பாக்கெட்டாக வாங்க ஆரம்பித்துவிட்டேன்!
பணம் போதவில்லை!
கடிகாரத்தை விற்று, நேரத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டோம்!
களிப்பாக, நாட்கள் கழிந்து கொண்டிருந்த வேளையில்...
திடீரென இன்னொரு மத்திய அரசுப்பணிக்கு நான் தேர்ச்சி பெற்றிருந்த செய்தி வந்தது!
மகிழ்வதா..என்று தெரியவில்லை!
பணியாணை வேறு வந்து விட்டது!
சேர்ந்து 4 மாதம்கூட முடியவில்லை!
உயர் அதிகாரியைக்கேட்டேன்!
“இந்த வேலையை விட்டுவிட்டு..நான் இதற்கு போகலாமா?”
“இந்த வாய்ப்பைத்தவற விடாதே! இந்தச்சம்பளம் அதிகம்! இங்கிருந்து ஓடிப்போ!”
-அன்புடன் ஆசிர்வதித்தார்.
அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன்!
“அவ்வளவு தூரமா? உனக்கு ஏதாவது ஆனால், எங்களால் பார்க்ககூட முடியாதே!”-என்று யோசித்தார்.
மூத்த அண்ணனிடம் கேட்டேன்! பிரிய மனமில்லை அவருக்கு.
“வேண்டவே வேண்டாம்!”-என்று சொல்லி விட்டார்.
ராஜஸ்தானில், கோட்டாவுக்கு அருகில் உள்ள ராவத்பாட்டாவில் பணிக்கு சேர வேண்டும்!
ஹிந்தி சுத்தம்! ஆங்கிலம் அரைகுறை!
ரெயிலில் பயணித்து பழக்கமில்லை!
சென்னைக்கு வந்ததையே பிரமாண்டமாக எண்ணிய காலம் அது!
நான்தான் இனி முடிவெடுக்கவேண்டும்!
தமிழ்நாட்டை விட்டு பிரிந்து செல்ல வேண்டும்!
காரணம்...சம்பளம் அதிகம்! எதிர்காலம்!
யோசித்தேன்! யோசித்தேன்! யோசித்தேன்!
“நான் போகிறேன்!”-சரியா..தவறா..என்று இன்றுகூட எனக்குத்தெரியவில்லை!
மறுப்புகள் வலுவிழந்தன!
மீண்டும் சென்னைக்கு வந்தேன்!
டிக்கெட் ரிசர்வ் செய்ய நேரமில்லை! அதை எப்படி செய்வது என்றும் தெரியாது!
சாதா டிக்கெட் வாங்கி, ரயிலில் ஏறிக்கொண்டேன்!
நண்பர்கள் கண்ணீர்விட்டனர்!
ரயில் புறப்பட்டுவிட்டது!
தனியாக நான்! கைகளில் ஒரு ஏரோஃப்ளேன் படம் போட்ட பெட்டியுடன்!
ஒரு இருக்கை காலியாக இருந்தது!
அமர்ந்து கொண்டேன்!
அது ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் என்று எனக்கு, அப்போது தெரியவில்லை!
ரயில்வண்டி ஆந்திரா எல்லை வரும் வரை டிடிஆர் வரவில்லை!
‘ரெயில் பயணம் இவ்வளவுதானா..”-மனம் தைரியமடைந்தது.
டிடிஆர் வந்தார்!
டிக்கெட்டைக்காட்டினேன்!
அவர், என்னை, மேலும் கீழும் ஒரு மாதிரியாகப்பார்த்தார்!


 -வளரலாம்!



No comments: