இன்று (16-08-2012), சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி நீச்சல் வளாகத்தில் ஒரு விபத்து நடந்துள்ளது. அதில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கி உயிர் நீத்துள்ளான்.
வளர வேண்டிய ஒரு இளந்தளிர், மற்றவர்களை, கண்ணீரில் மூழ்க வைத்து, தண்ணீரில் தன் உயிரை இழந்துள்ளது.
எப்படி ஆறுதல் சொல்வது?
அதை விட, இதற்கு யார் காரணம்?
ஸ்ருதியின் மரணத்தால், மனமே ரணமாகிப்போன நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி!
கோபங்களை, துக்கங்களை ஒதுக்கி விட்டுப்பார்ப்போம்.
நீச்சல் வளாகம் என்பது பொதுவாக ஆபத்து நிறைந்த ஒன்றாகும்.
தன் குழந்தை நீச்சல் பயிற்சியில் இருக்கும்போது, ஒரு நிமிடம்கூட, பார்வையை, குழந்தை மீதிலிருந்து எடுக்கக்கூடாது. அந்த நேரங்களில், செல் போனில் பேசுவதோ, பிறருடன் உரையாடுவதையோ தவிர்க்க வேண்டும்.
யாரோ, முன்பின் தெரியாத பயிற்சியாளர்களிடம், குறைந்த கட்டணத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள முயல்வதும் தவறு.
வளர வேண்டிய ஒரு இளந்தளிர், மற்றவர்களை, கண்ணீரில் மூழ்க வைத்து, தண்ணீரில் தன் உயிரை இழந்துள்ளது.
எப்படி ஆறுதல் சொல்வது?
அதை விட, இதற்கு யார் காரணம்?
ஸ்ருதியின் மரணத்தால், மனமே ரணமாகிப்போன நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி!
கோபங்களை, துக்கங்களை ஒதுக்கி விட்டுப்பார்ப்போம்.
நீச்சல் வளாகம் என்பது பொதுவாக ஆபத்து நிறைந்த ஒன்றாகும்.
சரியான வழிமுறைகளை, கடைபிடித்தால் அந்த ஆபத்துகளை அகற்றி, நீச்சல் வளாகத்தை தன் வசம் கொள்ளலாம்.
நீச்சல் கற்றுக்கொள்ளும் குழந்தைகளை விட, பெற்றோர்கள் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
யாரோ, முன்பின் தெரியாத பயிற்சியாளர்களிடம், குறைந்த கட்டணத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள முயல்வதும் தவறு.
விதிகளை பின்பற்றாத நீச்சல் குளங்களில், குழந்தைகளை அனுப்புவதும் தவறு.
ஆனால், இந்த விபத்து பள்ளியில் நடந்துள்ளது. ஆக..
பள்ளி விளையாட்டுத்துறை நிர்வாகத்தின் கவனக்குறைவு, திறமைக்குறைவு பற்றியும், பள்ளி நிர்வாகத்தின் பொதுவான பொறுப்பு குறைவு பற்றியும் விசாரணை செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது.
இந்த் மாதிரி விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்க இறைவனை இறைஞ்சுகிறேன்!
No comments:
Post a Comment