Popular Posts

Monday, September 26, 2011

எச்சில் மனிதன்!

கதவு தட்டப்பட்டது! ஜன்னலில் எட்டிப்பார்த்தேன்!
வெட்டவெளியில் வெறித்து நின்றபடி என் வெண்தேவதை!
புகை மண்டலத்தில் கால்கள் புதைத்தபடி!

அந்த குளிரிலும் வேர்த்தன என் தேகம்!
உலர்ந்து போகின உதடுகள்!
நடுங்கிய படி மீண்டும் கட்டிலை நோக்கி நடந்தேன்!
என்னை விலைக்கு வாங்கிய வரதட்சணை லட்சுமி,
அங்கு நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருந்தாள்!

மீண்டும் கதவு தட்டப்பட்டது! ஆங்காரமாய்..
ஓடிச்சென்று திறந்தேன்!
காற்றில் அலைந்தபடி அவள்தான்!
”இவளோடாவது ஒழுங்காக இரு என் இனிய துரோகியே!”
-என் காதுகளில் அசரீரியாய் இசைத்து மறைந்தாள்!
வெட்டவெளியும் மறைய..யாருமில்லை அங்கே!

பயத்தில் ‘ஓ!’-என அலற..
உறங்கிக்கொண்டிருந்த அவள் எழுந்து பதறியபடி..
என்னைத்தாங்கினாள்!
அவளுக்கு தெரியாது..
’கறை பட்ட என் கடந்த காலம்,
என்னை எச்சில் மனிதனாய் ஏளனம் செய்து கொண்டுருப்பதை!!!

2 comments:

சு. திருநாவுக்கரசு said...

வந்து படிச்சு நொந்த நண்பர்களே!
கொஞ்சம், கொமண்டி, குத்திட்டு
போங்களேன்!

தாய்மனம் said...

ரணம், இல்லா மனம் இல்லை
ரணகளமாக, மனம் மட்டுமே ஆகிபோகிறது
அப்படி ஆக்கிய புத்தி, தன் புத்திசாலித்தனத்தால்
கிடைத்த வெற்றி பரிசுகளை எண்ணிக்கொண்டிருக்கிறது

மனிதன், பரிசுகள் என்று எண்ணி கொண்டிருப்பதர்கேல்லாம் கொடுத்த விலைதான் ரணக்கலாமாகிப்போன மனம்

(ஆத்மா = மனம்)