இன்று (04-12-2011), ஜவஹர்லால் நேரு இண்டோர் ஸ்டேடியம், சென்னையில் கோலாகலமாக 53 வது வின்டர் நேஷனல் பிரிட்ஜ் போட்டி ஆரம்பமாகி உள்ளது!
இந்த போட்டி, சுமார் ஏழு நாட்கள் (04-10, டிசம்பர், 2011 வரை ) நடக்க உள்ளது.
ருயா’ ட்ராஃபி, ஹோல்கர் ட்ராஃபி என்று அழைக்கப்படும், பிரிட்ஜ் டைட்டில்-க்காக, களத்தில், 140 டீம்கள் ( 840 வீரர்கள்) உள்ளனர்!
மேலும் பல வீரர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நானும், கச்சேரிக்கு போகிறேன் பேர்வழி போல, இந்த போட்டியில் கலந்து, சுமார், 50 டீல்கள் (நாள் முழுக்க) விளயாடினேன். ஆனால், தொடர்ந்து, 7 நாட்கள் செலவழிக்க இயலாத காரணத்தால், வெற்றி பெற வேண்டிய பொறுப்பை, எனது சென்னை நண்பரின் தலையில் கட்டிவிட்டு, வீடு திரும்பிவிட்டேன்!
மேலும் விளையாட ஆசைதான்!
ஆனால், சின்ன சின்ன குட்டி போட்டிகள் நிறைய சென்னையில் நடத்துவார்கள்!
அவை 2-3 நாட்களில் முடிந்துவிடும்!
அதுதான் நமக்கும் சௌகரியம்!
சென்னை வந்துள்ள, பிற மாநில அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
இந்த பிரமாண்டமான போட்டியை, முன் நின்று நடத்தும்
திரு. N.R. கிருபாகரமூர்த்தி, (President, Bridge Federation of India) அவர்களுக்கு, நமது, சென்னையில் நடத்த முயற்சி எடுத்தமைக்காக பிரதான வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறேன்!
-இப்படிக்கு
கரு நாக்கு
04-11-2011
5 comments:
முற்றிலும் மாறுபட்ட பதிவு ,இது போன்று நிறைய எழுதுமாறு ,இந்த அண்ணன் கேட்டுக்கொள்கிறேன்
இந்த விளையாட்டைப்பற்றி நல்ல முறையில் கற்றுக்கொள்ள http://www.rpbridge.net/ என்ற தளத்தைப்பயன்படுத்திக்கொள்ளவும்!
மன்னிக்கணும்.. நீங்க இதை ட்வீட்டினப்போ நான் மொபைல் ல இருந்தேன்..! அதனாலே கமெண்ட்ஸ் பதிவு பண்ன வசதி படலே..! இந்த விளையாட்டை பற்றி அநேகருக்கு இங்கே தெரியாது.. எனக்கும்.! ஆனால்.., இப்படியும் ஒரு வெளாட்டு இருக்குன்னு தெரியும்..., அவ்ளோவ் தான்..! நீங்க இதில் வித்தகர் என்பது பெருமைப்படக்கூடிய விஷயம்..! விளையாடுங்கள் ... வெற்றிபெறுங்கள் .. !!
நன்றி! என்னால் இயன்ற உதவிகளைச்செய்ய தயாராக உள்ளேன். அலுவல்/குடும்ப பணி காரணமாக, சுமார் 2 வருடங்கள் சரியாக விளையாடுவதில்லை. ஆனால் NET’லில் தொடர்ந்து விளையாடுகிறேன். :)
please give the full rules of the game in tamil..
Post a Comment