என் நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு என் அறிவுக்கு எட்டிய அல்லது புரிந்த பதில்களைத்தந்துள்ளேன். கேள்விகள் கேட்டவர்கள் : @DheepakG @Vithuvaan @pulavar_tharumi @RanchitKumar @veppamaram
அ) இயற்கை சீற்றத்தினால் வரும் ஆபத்து.
அஞ்சத்தேவையில்லை. தாங்கள் குறிப்பிட்டபடி 6 அடுக்கு பாதுகாப்பு உள்ளது.
ஆ) மனித தவறினால் வரும் ஆபத்து. (போபால் விசா வாய்வு ஆபத்து போல)(அதைகூட அமெரிக்கன் டெஸ்ட் பன்னுரதர்க்காக் செஞ்சானு வேற சொல்லிக்கிராயிங்க.
6 அடுக்கு பாதுகாப்பில், அதுவும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றது.
இ)போர் காலங்களில், இது கடற்கரையில் இருக்கிறது என்பதால் எதிரிகளால் ரொம்ப எளிமையாக போர் கப்பலிலிருந்து ரெண்டாயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தாக்கப்படும் ஈசியான டார்கட். போர் தந்திரங்களில், என்னை கிணறுகள், போர்த்தலவாடங்கள் சப்ளை செய்யும் இடங்களை தாக்குவதும் ஒன்று. நாட்டின் கவனத்தை திசை திருப்பவும், சண்டையின்போது சம்பந்தமில்லாத நாடு தான் கண்டுபிடித்த ஏவுகணையை சோதித்து பார்க்க கூட இதன் மீது வீசலாம். அப்படித்தான் 1971 இந்தோ-பாக் சண்டையின்போது நிகழ்ந்தது. நம் கடற்படை கப்பலை இந்த சண்டையில் சம்பந்தமில்லாத அமெரிக்கன் நீர்மூழ்கி கப்பல் டார்பிடோ வீசி மூழ்கடித்தது. நமது அரசு எல்லா நாடுகளுடன் சமாதானம் நட்புறவு கொள்ளவே விரும்புகிறது. ஆனால் பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தான், பங்களாதேஷ் ஸ்ரீலங்கா மாலி தீவு எவ்வளவு தூரம் நம்பமுடியும்? சும்மாவே சைனாக்காரனும் கொரியன்காரனும் நம்ம கடலை சுத்திக்கிட்டு இருக்காங்கே.
போர் வந்தால், நாம் வெல்வோம்!
ஈ)மற்ற விஷயங்கள் மாதிரி, இதில் ஆபத்து வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கமுடியாது.
மிகுந்த கவனத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பயம் தேவையில்லை.
உ)ஒரு உலை இல்லை மொத்தம் ஆறு உலைகள்.பல லட்சம் மக்கள் பாதிக்க படுவார்கள். மேலும் அந்த பிராந்தியம் முழுவதும் எதற்கும் லாயக்கு இல்லாது பாழ்பட்டு விடும். பாதி தமிழ்நாடே காலி. நம் மக்களால் இதை தாங்க முடியுமா?
இதுவும் தேவையற்ற பயம். பல மாநிலங்களில் அணு உலைகள் உள்ளன. காங்கிரஸ் ஆளும்/அல்லாத மாநிலம் என்ற பேதங்கள் இதில் அறவேயில்லை.
ஊ) அன்றாடம் வெளியேறும் நீரினால் ஏற்படும் கதிவீச்சு காரணமாக மீன் வளம் நாசம். எட்டு கிலோ மீட்டருக்கு அப்பால் மீன் பிடிக்கணும். மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கபடுகிறது. போராடாமல் என்ன செய்வார்கள்?
இதில் உண்மை அறவே இல்லை. சாட்சி : கல்பாக்கம்.
எ)தினம் தினம் உருவாகிற அனு கழிவுகளை தேக்கி வைத்துக்கொண்டு பெரிய நாடுகளே திணறுகின்றன. பல நாடுகள் ரொம்ப தூரம் கடந்து வந்து நமது இந்து மகா சமுத்திரத்தில் வந்து கொட்டிவிட்டு செல்கின்றன. ஏன்? அவர்கள் நாட்டு பக்கத்தில கொட்டினால் அவர்களின் மீன் கடல் வளம் பாதிக்கும் என்பதனால்தானே?
நாம் பலவீனமாக இருந்தால், நம் தலைமீது கூட கொட்டிச்செல்வார்கள்.
ஏ) இதில் ஒன்றுமே பயப்பட தேவை இல்லை என்றால் ஏன் ஆறு அடுக்கு பாதுகாப்பு? ஆபத்து இல்லை என்றால் வேறு மாநிலத்தில கட்ட வேண்டியதுதானே? அங்கெல்லாம் மின்சாரம் பற்றாகுறை இல்லையா?
இதற்கான பதில் முதலிலே கூறப்பட்டிருக்கின்றது.
ஐ)உலகின் பல நாடுகள் இன்க்ளுடிங் அமெரிக்கா அணஉ உலையை மூடிக்கொண்டு வருகையிலே இப்போ நாம ஏன் புதுசா கட்டி ஆரம்பிக்கணும்? மாற்று வழிகள் நிறைய இருப்பதை ஏன் ஆராயக்கூடாது? உலகின் தலை சிறந்த விஞ்சாநிகளுக்கு நம் நாட்டில் பஞ்சமா?
உங்கள் தகவல் தவறானது. எனது முந்தைய பதிப்பில் இதற்கான பதில் இருக்கின்றது.
ஒ)லஞ்சலாவண்யம் நிறைந்துள்ள நமது நாட்டில், தவறான அரசு போக்கினால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் போன்ற காரியங்களில் ஈடுபட மாட்டார்கள் என்பது என்ன உத்திரவாதம்?
இது ஒரு நெகட்டிவ்’வான கேள்வி. அவமானப்படுகிறேன்.
No comments:
Post a Comment