மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும், ஏதாவது ஒரு சமயத்தில் குளித்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு
உள்ளாகிறான். ஆனால்
ஏன்
எதற்காக..
என்கிற
காரணங்களை,
இதுவரை
எந்த
விஞ்ஞானியும்
தெளிவாக
ஆராயவில்லை
என்றே
ஆய்வுக்குறிப்புகள் சொல்கின்றன. ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன்,
வேண்டாத
விஷயங்களைப்பற்றியெல்லாம் ஆய்வு
செய்துள்ளார், ஆனால்
இந்த
குளியலைப்பற்றி அவர்
எங்கும்
தனது
ஆய்வுக்குறிப்பில் சொல்லவில்லை
என்பதே
எனது
இந்த
ஆராய்ச்சி
கட்டுரைக்கு
மையமாக மாறியுள்ளது என்பது
ஒரு
வியப்பான
செய்திதானே!
கழுதை, குதிரை, மாடு, ஆடு, பூனை, யானை இவையெல்லாம் எப்படியோ,
எப்படி
எப்படியோ
குளிக்கிறது. ஒரு
முறையாக,
ஒழுங்காக
இருப்பதாக
தெரியவில்லை. சனிக்கிழமை, நல்லெண்ணை
தடவி
இவையெல்லாம்
குளிக்கிறதா? என்று
அறியமுடியவில்லை. சோப்பு,
ஷாம்பூ இன்னும் இதர பிதர இத்யாதிகளை
எல்லாம் வாங்கி முறைப்படி குளிக்கிற ஒரே ஜென்மம், மனித ஜென்மம்தான்!
இருந்தாலும், மக்கள்
மத்தியில்
சரியான
விழிப்புணர்வு இல்லாமல்
தூங்கிவழிகிறார்கள் என்கிற
அசதியான
உணர்வு
வந்த
காரணத்தால்
தான்
இந்த
முக்கியமான
ஆராய்ச்சியை
மேற்க்கொண்டுள்ளேன்.
பிறந்து மூன்று நாள் ஆன குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று, எங்க பெரிய ஆயாவை கேட்டேன். “போடா..பொசக்கட்ட நாயி! உனக்கெதுக்கு அதெல்லாம்..” என்று என்னை வைது விட்டாள் அந்த கெய்வி. தகவலை பகிர்ந்து கொள்ள, ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த கிழவி அச்சப்படுகிறார்
என்றே
மனதுக்குப்பட்டது. ஒரு
ஆர்டிஐ
போட்டு
வைத்திருக்கேன். இந்த
கட்டுரை
முடியும்
வரை
அந்த கெய்வி அதாவது என் ஆயா, எந்த பதிலையும் தரவில்லை.
அழுக்கு கலரில் ஜீன்ஸ் போட்ட ஒரு தம்பியிடம், ஒரு அவ நம்பிக்கையோடு குதூகல குளியலைப்பற்றி
கேட்ட
போது,
“ அப்படின்னா
என்ன
அண்ணே?
“ என்று
கேட்டுவிட்டான். அவனுக்கு
குளியலைப்பற்றி அடிப்படை
அறிவு
கூட
இல்லை
என்று
அறிந்த
போது,
என்னையும்
அறியாமல்
கண் கலங்கி கொஞ்சம் கதறி அழுதுவிட்டேன்..
கரும்புத்தோட்டத்தில், பம்ப் செட்டு தண்ணீரில் ஹாய்யாக குளித்துக்கொண்டிருந்த,
ஒரு
விவசாயியைக்கண்டேன். இவரைக்கேட்டால், குளியலைப்பற்றி சில
ஆவணங்கள்
கிடைக்கும்
என்று
ஒரு
நம்பிக்கையோடு, அவரை
நெருங்கி,
“குதூகல
குளியலைப்பற்றி ஒரு
குறிப்பு
வேண்டும்.
நீங்கள்
உதவ
முடியுமா?”
என்று
துணிவுடன்
கேட்டேன்.
”ஒரு
கோவணம்
இருக்கு.
அதை
எடுத்து
கட்டிட்டி
வா!
தெளிவா
விளக்குகிறேன்” என்று
காட்டமாக
பதில்
வர,
அங்கிருந்து
நழுவினேன்.
சரி!
இந்த ஆண்கள்தான் சரியான புள்ளி விபரங்களை தர தயங்குகிறார்களே என்று எண்ணிக்கொண்டே, சில பெண் நண்பிகளிடம் இது பற்றி
கேட்க, ….ம்! இந்த ஆண்களே பரவாயில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். இப்படியா திட்டுவது?
ஒரு கேள்வி கேட்டால், தெரியும் அல்லது தெரியாது என்று பதில் சொல்வதுதானே முறை. அதை
விட்டுவிட்டு, அடிதடியில் இறங்குவது, சகட்டுமேனிக்கு கய்வி கய்வி ஊத்துவது…. அடச்சே!
இந்த ஆராய்ச்சியே வேண்டாம்… .என்கிற நிலைமைக்கு அவர்கள் என்னை கொண்டு போய்விட்டார்கள்.
கிடைத்த
விவரங்களை ஒரு பத்திரியாளன் என்கிற முறையில், பதிந்துவிடுவது, பிற்காலத்தில் யாருக்காவது
உதவிகரமாக இருக்குமென்றெ இதை துணிந்து எழுதி விட்டேன்.
குதூகலமான குளியலுக்கு, ஆராய்ச்சி ரீதியில் அதிகார பூர்வமான தகவல்கள் கிடைக்காத காரணத்தால், அநேகமாக ஆராய்ச்சியின் முடிவு, தர்க்கரீதியாகவும், நியாயத்தின் அடிப்படையிலும்
”குளிக்காமல் இருப்பதே குதூகலமானது!” என்கிற முடிவுக்கு தள்ளப்பட்டு, தற்காலியமாக, மிகுந்த தலைவலியோடு
இந்த
கட்டுரையை
நிறைவு
செய்கிறேன்.
அன்புடன்
திருநாவு
4 comments:
பூவே உனக்காக படம் பார்த்தீர்கள் என்றால்சார்லி சுதந்திரக்குளியல் பற்றிபூரண விளக்கம் கொடுத்து இருப்பார்:))) பகிர்வு சரவெடி!
தொடர்ந்து பதிவு எழுதுங்க ஐயா:)))
நான் இந்த பிளாக் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு!
நேரமின்மை என்று பொய் சொல்ல விருப்பமில்லை.
ஆர்வம் குன்றிவிட்டது.
முயற்சி செய்கிறேன்.
பாராட்டுக்கு நன்றி!
Water Hack Burns 2 lb of Fat OVERNIGHT
At least 160 000 women and men are hacking their diet with a easy and SECRET "water hack" to burn 1-2lbs every night as they sleep.
It's effective and it works on everybody.
This is how you can do it yourself:
1) Get a glass and fill it up with water half the way
2) And now do this awesome HACK
you'll be 1-2lbs lighter when you wake up!
Post a Comment