Popular Posts

Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Monday, August 1, 2011

சினம் நீ!

சினம் நீ!
நீண்ட தீ வளர்த்த
வனம் நீ!
களவு கண்டு
கண் சிவந்த இனம் நீ!

மதியா வாழ்வை மறுத்தழித்த..
மானமிகு மங்கை நீ!
அக்கிரமம் சகியா..
அக்கினி கணம் நீ!

எச்சிரமம் வந்தாலும்..
சிரம் வணங்கா பெண் இனம் நீ!
பைந்தமிழ் மடியில் தவழும் தமிழ் நீ!
'பா' தொடுத்த பாரதியின் நனவு நீ! 

தாய்தந்த பாலின் வைரியம் பெரிது!
தந்தை சொல் தந்த தைரியம் பெரிது! 
வையம் பெரிது!
தவமாய் வந்த இவ்வாழ்வும் அரிது!
தனல் தவறேல்! அனல் தவறேல்!
ஈன்றோர் பெருவயிறு சிறக்கும்..சிலிர்க்கும்..
நீ.. நின்று... வென்று.. வாழ்ந்தால் தான்!!

(விவாகரத்தில் சிக்கி.. காயப்பட்டு நிற்கும்  என் மகள்களுக்கு அர்ப்பணம்)








Friday, July 29, 2011

குலப்பெண்!

வாசல் பெருக்கி கோலம் போட்டாங்க!
வாசம் வச்ச பூவோடு வளய வந்தாங்க!
மாமன்முறை வந்தாக்க..
வளையல் சத்தம் தந்தாங்க!
தாவணி போட்டாங்க!  தண்ணீர் குடமெடுத்து 
தழைய வந்தாங்க!
கண்மையெடுத்து புருவம் வச்சாங்க!
கண்களில் மட்டும் காதல் சொன்னாங்க!
பரிசம் போட்ட மாமன் மேலே
பாசம் வச்சாங்க!
வீரம் பார்த்தாங்க!   நல்ல நேரம் பார்த்தாங்க!
தவமாயிருந்தாங்க!  தாலி கேட்டாங்க!
வம்ஸம் விட்டு வம்ஸம் வந்தாங்க!
பெற்ற தாயை விட்டாங்க! தந்தையை மறந்தாங்க!
வளர்ந்த வீட்டிலே.
பழகிய பாசம்..பல நாள் நேசம்
விட்டுச்சென்றே..இல்லை..சுட்டுக்கொன்றே..
கொண்டவனை கொண்டாடி நின்னாங்க!
குணமாய் வாழ்ந்து குங்குமம் காத்தாங்க!
கொண்ட குலம் வளர்த்தாங்க!

காலம் மாறிப்போச்சு!
காதலும் மாறிப்போச்சு!
காசு பணம் பார்த்த பின்னே
கால்கட்டு போடுறாங்க!
கட்டும் நிக்கலே..வைச்ச
பொட்டும் ஒட்டலே!
குடும்பம் குறுகிப்போச்சு!
நம்ம குலமும் கருகிப்போச்சு!!!

Tuesday, July 26, 2011

சேமிப்பு!



எதிர்காலத்துக்காக

நிகழ்காலத்தை

தொலைப்பவர்கள்!

கனவுக்காக..
 

தூக்கத்தை இழப்பவர்கள்!

Monday, July 25, 2011

பொய்யோ நீ!

நம்மைத்தொட்டு..
விட்டுச்சென்ற காற்று!

நடந்த பாதைகள்!
புல்வெளி நினைவுகள்!

கண்மூடினாலும்..
கசிந்தது கண்ணீர்..

பொய்யோ நீ!

Saturday, July 23, 2011

சும்மா..படிக்க..கவித!

ஒட்டகத்தை யாரும் கொட்ட முடியாது! 
கோந்து கொட்டி போனா..ஒட்ட முடியாது!!

என் காதலுக்கு ஈடு இணை கிடையாது! 
ஒரு தலைக்காதல்!

நகத்தை நறுக்கித்தா.. சேமிக்கிறேன்! 
நீ நடக்கும் தெருவைச் சொல்! பூஜிக்கிறேன்!

மின்னல் நாணியது உன் கண்பட்டு!
தேனும், திகட்டும் தினை மாவும்
திகைத்தது உன் இதழ்பட்டு!!

உன் வரவே என் வரம்!
நம் உறவே என் உயிரின் உரம்!!

கருவிழியோ? காமக்கதிர் ஒளியோ?
பெருகிடும் காதல் வலியோ?சகி நீ செய்யும் சதியோ?
இல்லை..நீயுட்டனின் விதியோ? 

உன் 'யுரேனியப்'பார்வையிலே..
காதல் நுயுட்ரான்கள்..
நொறுங்கி உயிர்த்தன.. பல கோடி!

கூடல்கள் மெச்சப்படாதநேரங்களில்..
காதல் அச்சப்படும்!

ஹைக்கூ கவிதைகள்
 பல சமயம் செய்திடும் பெருந்தொல்லை!
சில சமயம் இதயத்தையடித்திடும் கொள்ளை!!