Popular Posts

Monday, August 1, 2011

சினம் நீ!

சினம் நீ!
நீண்ட தீ வளர்த்த
வனம் நீ!
களவு கண்டு
கண் சிவந்த இனம் நீ!

மதியா வாழ்வை மறுத்தழித்த..
மானமிகு மங்கை நீ!
அக்கிரமம் சகியா..
அக்கினி கணம் நீ!

எச்சிரமம் வந்தாலும்..
சிரம் வணங்கா பெண் இனம் நீ!
பைந்தமிழ் மடியில் தவழும் தமிழ் நீ!
'பா' தொடுத்த பாரதியின் நனவு நீ! 

தாய்தந்த பாலின் வைரியம் பெரிது!
தந்தை சொல் தந்த தைரியம் பெரிது! 
வையம் பெரிது!
தவமாய் வந்த இவ்வாழ்வும் அரிது!
தனல் தவறேல்! அனல் தவறேல்!
ஈன்றோர் பெருவயிறு சிறக்கும்..சிலிர்க்கும்..
நீ.. நின்று... வென்று.. வாழ்ந்தால் தான்!!

(விவாகரத்தில் சிக்கி.. காயப்பட்டு நிற்கும்  என் மகள்களுக்கு அர்ப்பணம்)








3 comments:

Nathan said...

அருமை... தொடரவும்...

சு. திருநாவுக்கரசு said...

நன்றி நண்பரே.

தாய்மனம் said...

கறுப்பு எழுத்துக்களில் அழகாக எழுதப்பட்டிருக்கும் ஆக்கமும் ஊக்கமும் தரும் கவிதை பாரதியின் கன்னமா பாட்டு போன்ற கவிதை # சட்டென்று தடம் மாறி # மனதை வலிக்க வைக்கிறது அந்த கடைசி சிகப்பு வரிகள். # நாளை வரும் நல்ல செய்தி # நம்பிக்கைதான் வாழ்க்கை # இப்ப உங்கள் அணைக்கும் கரங்கள் தான் நம்பிக்கை