Popular Posts

Showing posts with label கவித. Show all posts
Showing posts with label கவித. Show all posts

Monday, December 12, 2011

நித்தம் ஒரு யுத்தம்!


ஒற்றை நிலவுக்காக..
மேகங்கள் நித்தம் செய்கின்றன யுத்தம்!
போரும் மூழ்கிறது!
இடிகளுக்கோ பஞ்சமில்லை!
இரவு பகலென்று வித்தியாசமும்
பார்ப்பதில்லை!
அழுகைகளும், அதிர் உராய்வுகளும்
ஆங்காங்கே...
வெண்மேகங்களையும் போட்டியில்
கண்டிருக்கின்றேன்!
அழும் கரும்மேகங்களும் அஞ்சவில்லை!

பளிப்பு காட்டி நீந்திச்செல்லும்
ஒற்றை நிலா, பாவம் என்றுதான்
மனதில் பட்டது..
அமாவாசை வரை!

எவன் வென்றான் என்று தெரியவில்லை!
நிலவவளும் எங்கு சென்றாள் என்று புரியவில்லை! 

நிலவை ஒரு நாள் காணவில்லை!

வெட்கத்தோடு சிறுக சிறுக 
மீண்டும் அவள் நாணி வரும்போது...
என்ன செய்வது? 
என்னால் புன்னகைதான் செய்ய முடிந்தது!

-----------------------------






Wednesday, September 21, 2011

போதிமரங்கள் என் பின்னால்!




சுட்டெரிக்குது வெயில் 
நடு இரவில்!
கொட்டும் மழையிலும் 
உலர்ந்து போனது மனது!
மின்னல் ஒளியில் 
சூனியம் ’தகதக’த்தது!
விழுந்த இடிகளோ..
என் சலனத்தைக்கூட தொட முடியவில்லை! 
புத்தனின் போதிமரங்கள் 
என் பின்னால் வரிசையில்! 

Friday, August 12, 2011

என் கண்ணம்மா!

உன் புன்னகையின் சக்தியை நீ அறியாய்,
அது என் இதயத்தில் ஒளியேற்றும் வல்லமை கொண்டது என்று! 

மையிட்ட உன் கண்கள், என் கவிதைக்கும், மை தந்தன!

உன் சிரிப்பில் சிந்திய முத்துக்கள்,
விண்ணில் சிதறி  விழுந்தது எப்படி!

கண்களில் இரண்டு கருவண்டுகளை
சிறை வைத்து பார்த்தது எப்படி?

அதரங்களில் மதுரம் சேர்த்த மாயக்காரி!

நீ சிரித்த போது, சில சில்லரை துன்பங்களும் சிதறின!




Sunday, August 7, 2011

நீ!

உன் வீட்டு ஜன்னல், என்ன மின்னலுக்கு போட்டியா?

உன் கால் கொலுசு சப்தங்கள், என் கனவுகளில் தவழும் சந்தங்கள்!

உன் கண்கள் சொல்லிய கவிதைகள்தான் 
என் நெஞ்சின் உணர்வலைகள் ! 
உன் சுவாசம் தான், இந்த காற்றில் 
கலந்த உயிரலைகள்!!

உன் கண்வீச்சு அணு உலை கதிர்வீச்சையும் அடக்கி விடும்!

Thursday, August 4, 2011

கன்னல் கன்னத்தில்..


கன்னல் கன்னத்தில் சிறு மச்சம்!-உன்
கண்விழி கண்டு கருவண்டுக்கு அச்சம்!

உன் வாசம் புது ரோஜாவுக்கு சுவாசம்!
பூவுலகு காட்டும் உன்மேல் நேசம்!

உன் சிணுங்கலில் முத்தமிழும் நொறுங்கும்!
முத்தமழை மொத்தமும் மோகத்தோடு நெருங்கும்!



உன் புன்னகைக்கு முன்னால்..
பொன்னகைகளும்  முகம் கோணும்!
பூக்காடும் நாணும்!

நடந்தால் தெருவில் திருவிழா!
காதல் கடவுளுக்கும் பெருவிழா!

நீ சர்க்கரை!

உன் இனிய பார்வை!
கற்கண்டு பேச்சு!!
கன்னத்தில் ஒட்டியிருக்கும்
கரும்புச்சாறு!
இதழ்களில்  மலைத்தேன்!

இருந்தாலும் சர்க்கரை விலை
இன்னும் ஏன் இறங்க வில்லை?

"அரசு" க்கு உன் விசயம் தெரியாத காரணமோ?