டிவிட்டுலகத்தில், ஆண் ட்விட்டர்களும், பெண் ட்விட்டர்களும் அடிக்கடி மோதிக்கொள்ளும் போக்கு தென்படுகிறது.
பெண் டிவிட்டர்கள் சொற்ப எண்ணிக்கையளவிலே இருக்கிறார்கள்.
ஆண்கள் அதிக, அளவில்.. உலாவும் இடம் டிவிட்டுலகம்.
ஆகவே, வாதங்களில் சமத்தன்மை இருக்க வாய்ப்பில்லை.
ஜாலிக்காவே, நிறைய ட்விட்டர்கள் கீச்சுகிறார்கள்.
மனதில் தோன்றுவதை, எழுத்தில் கொட்டிவிடுகிறார்கள்.
அதை, தோண்டி ஆராயத்தேவையில்லை.
மொத்தத்தில், இதைக்கவனிக்கையில், அங்கு வாதம் ஒன்று இருப்பதாகவே தென்படவில்லை!
ஏதோ சொன்னோம்!’ என்றே அமைந்து விடுகின்றன பெரும்பாலான வாதங்கள்!
சிறு வயது கீச்சர்கள், அறிவார்ந்த கீச்சர்கள், நடுத்தர வயது கீச்சர்கள், வயதான கீச்சர்கள், வம்பு வளர்க்கவே வரும் கீச்சர்கள் என்று பல ரக கீச்சர்கள், நேரம் போக, ட்விட்டுலகத்தை, நாடுகிறார்கள்.
அங்கு ட்விட்டுகளை படித்து, ரசித்து மகிழ்கிறார்கள்!
ட்விட்டியும் மகிழ்கிறார்கள்!
சமூக பிரச்னைகளை, நையாண்டி செய்து மகிழ்வது ஒரு பொதுவான நடப்பு.
சில சமயங்களில், தனிப்பட்ட முறையில் சில பிரச்னைகள் உருவெடுக்கின்றன.
அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
தேவையற்ற வாதங்களால், அல்லது சில அறிவிலிகளின் மூர்க்கத்தனத்தால், தனிப்பட்ட
பிரச்னைகள் தோன்றி மறைவதையும் காண்கிறோம்!
அநியாயத்துக்கு, ட்விட்டுகளில், சினிமாத்துறையினர், அதிலும் குறிப்பாக நடிக, நடிகைகள் அதிகம் அடிபடுகிறார்கள்.
என்ன செயவது?
நமக்கு பேசுவதற்கும், கிண்டல் செய்வதற்கும் கிடைத்த பாவப்பட்டவர்கள் அவர்களே.
அவர்களை கிண்டல் செய்வதின் மூலம், தத்தம் தாழ்வுணர்ச்சியிலிருந்து சற்று அவர்களுக்கு தற்காலிய விடுதலை கிடைப்பதால், அது பற்றிப்பேசிப்பயனில்லை.
அதை விட்டுத்தள்ளுங்கள்!
பெண்ணியம், அதன் கண்ணியம் இவை, கீச்சுலகில் அதிகம் ஆராயப்படுகிறது.
பெண்ணியம் என்று வந்ததுக்கு காரணமே ஆண்களின் அத்து மீறல்தான்!
ஆண்களின், beast energy தான் அதற்கு அடிப்படை காரணியாக இருக்கிறது என்பதை மறுத்தும் பயனில்லை!
அதுவல்லாமல், சமூகத்தில், இருவர்க்கும், சம பொறுப்பு இருப்பதாக இருபாலாரும் உணரவில்லை.
(பொதுவான) பெண்களின் மீதான ஆண்களின் கண்ணோட்டம் ஆரோக்யமானதாக இல்லை.
ஆண்களின் மீதான நம்பகத்தன்மை, பெண்களிடத்தில் மிகக்குறைந்து வருகிறது.
இருபாலாரின் மேலோட்டமான (குறைந்த பட்ச) ஒழுக்கமே காயப்பட்டு நிற்கிறது.
அதை சரி செய்ய, தற்சமயம் கை வசம், எந்த தீர்வும் கண்களுக்கு தெரியவில்லை.
கூட்டுக்குடும்பங்கள் இல்லாத இந்த காலங்களில், இப்போது வளரும் இளைய தலைமுறைக்கு, பாசப்பற்றாக்குறை எனும் பஞ்சம் ஏற்பட்டிருகின்றது. அதன் விளைவாக, அதீதக்காதல் அல்லது அதீத மோதல் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
99% மார்க் வாங்கி பழக்கப்பட்டவர்கள், தோல்விகளை விரும்பதில்லை.
ஆனால், வாழ்க்கை, மீண்டும் மீண்டும் அவர்களுக்கு பரிட்சையாகவே இருந்து வருகிறது.
போராட்டம் வாழ்க்கையாகி வருகிறது!
வெற்றி, வெறியாகி வளர்கிறது.
உலகத்தில் இருக்கும் அத்துணை இளைஞ சமூகமே, இந்த வெப்பத்தை சந்தித்து வருகிறது.
நிற்க!
உலகம் முழுதும் பெண்கள் அடிமைப்பட்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை!
சில இடங்களில், மிக அதிகம்.. அல்லது குறைவு.. என்று மாறுபட்டு இருக்கின்றது அடிமைத்தன்மை.
ஆனால், இந்தியாவில், குடும்ப அமைப்பு காரணமாக, பெண்களுக்கு ஏதுவான சூழ்நிலை, அதிகமாக இருக்கின்றது.
இதைத்தான், நான் குறிப்பிட விரும்புகிறேன்!
ஒரு நல்ல குடும்பத்தில், ஒரு பெண்,பொறுப்பேற்கும்போது, சிறந்த தாயாக, குடும்பத்தலைவியாக இருக்க முடியும்! ஆண்களையும் கட்டுப்படுத்த முடியும்!
குடும்ப சுகம் என்பது தனிதானே!
அக்கா, தங்கை, அண்ணி, நாத்தனார் இப்படி பல உறவுகள் குடும்ப அமைப்புகளில்
காண்கிறோம்!
இந்த சிறப்பு, மற்ற தேசங்களில் அதிகம் இல்லை!
ஆகவே...
பல சந்தோஷமான குடும்பங்களில், பெண்களின் பங்கு அல்லது ஆதிக்கம் இருக்கக் காண்கிறோம்!
இது நமது வெற்றிதானே!

(மனதில் தோன்றிய கருத்துகளே இவை! மாறுதலுக்கு உட்பட்டது!)
-எச்சரிக்கை: இன்னும் முடியவில்லை
4 comments:
மாறுதலுக்கு உட்பட்டது ..ஹாஹ்ஹஹா அதுதான் கருநாக்கின் ஸ்பெசல் ,குறிப்பாக உங்களைப் போன்ற விஷயம் தெரிந்தவர்கள் டிவிட்டரில் ஒதுங்கிச் செல்வதே ,பைசா பெறாத பிரச்சனைகளை பேசி வீணடிக்கிறோம் ....தவறு எங்கள் மீதுதான் ,அதை தடுக்க முயலாததுதான் விசயமுள்ளவர்களின் தவறு.. இந்த கருத்து மாறுதலுக்கு உட்பட்டது அல்ல.. :-) நன்றியுடன் உங்கள் உடன்பிறப்பு
லேசா.. வலிக்காத மாதிரி ரெண்டு கொட்டு வச்ச மாதிரி இருக்கு! தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
நிச்சயம்! தகவலுக்கு நன்றி!
Post a Comment