Popular Posts

Sunday, July 31, 2011

செத்தாலும் மாறாது!

ப்ரியா தலை கீழாகத்தொங்கிக்கொண்டிருந்தாள். 

உடல் கனமே தெரியவில்லை. 

செத்து போனது புரிந்தது. 

ஆனால் நினைவுகள் எதுவும் சாகவில்லை!

‘சாகாவரம் பெற்றது நினைவுகள் மட்டும்தானே!’

காற்று வேறு  ஜில்லென்று வீசிக்கொண்டிருந்தது.
அக்கம்பக்கம் பார்த்தாள்! ஆள் அரவம் எதுவும் இல்லை.

செத்து எத்தனை நேரம் ஆனது என்றும் புரியவில்லை. 

ஆனால் ஏன் செத்தோம்? எதற்கு செத்தோம் என்று நன்றாகத்தெரிந்தது.

தனது உடலை என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.

எரித்திருப்பார்களோ?

’என்ன இழவோ.. இப்பொழுது அதுவா முக்கியம்?’

’பிரகாஷ் ஏன் இன்னும் வரவில்லை?

இங்கே தன்னந்தனியே..  தனியாக..மயானத்தில் ஒரு பெண் பேயாகத்தொங்கி.கொண்டு..இருக்கிறாள்..

இவன் மட்டும் வழக்கம் போல.. ...ஏமாற்றி விட்டானோ? ’  பிரியா மனம் படபடத்தது!

"மறுபடியும் செத்து  மனிதர்களோடு சேர்ந்து கொள்ளலாமா?"

"சேச்சே..அது மட்டும் கூடாது..மனிதர்களா அவர்கள்?.."

பேய்கள்! ச்சீ.. நானே பேயாகிவிட்டேன்!

மனிதர்களோடு நம்மை சேர்த்தக்கூடாது..  கேவலம்! மகாக்கேவலம்!!

மனிதர்களை நினைத்தாலே அறுவெறுப்பாக இருந்தது.

’என்ன ஜென்மங்களோ?

எப்படித்தான்  பிழைக்கிறார்களோ?’

நல்லவேளை..நான் தப்பித்துகொண்டேன்.

நிம்மதியாக மூச்சு விடப்பார்த்தாள் பிரியா!

மூச்சுத்தான் நின்று விட்டதே!  எப்படி விடமுடியும்?

சீக்கிரம் இந்த மனிதப்பழக்கங்களை,
மறந்து விடவேண்டும் என எண்ணிக்கொண்டாள்!

மறுபடியும் பிரகாஷ் நினைப்பு வந்தது.

இந்த நா(பே)ய் ஏன் இன்னும் வரவில்லை?

"நாய்.." என்று அவனை சொல்லிப்பார்க்கும் போது சிரிப்பு வந்தது.
வாலாட்டிக்கொண்டு..."பௌ..பௌ" தன்பின் வருவது போல் கற்பனை செய்து பார்த்தாள்!

புன்னகைசெய்து கொண்டே.. அந்த மரத்திலிருந்த ஒரு கிளையைப் பிடித்து..
"விஷ்" என்று தாவிப்பிடித்தாள் மறு கிளையை..

இதை மட்டும் அம்மா பார்த்தால், "பொட்டை புள்ளைக்கு இது ஆகாது"
என்று கரடியாய்க்கத்துவாள்.

பெண்களை அடைக்கி வளர்ப்பதனால் தானோ பெண்குணம் வந்து விட்டதுவோ?

பசங்களுக்கு ஒரு கட்டுபாடுமில்லை.. அதனால் தான் பய புள்ளைக..பயமில்லாம
திரியறானுக! - பிரியா கோபத்தோடு அந்த மரக்கிளையைப் பிடித்து உலுக்கினாள்.

பெண்னாக வாழ்வதை விட, பேயாக
வாழ்வதில் எத்தனை இன்பம்? பல் துலக்கல், குளியல்..அலங்காரம்.
என்று எதுவும் தேவையில்லை!
குறிப்பா..இந்த அசிங்கபிடித்த.. ஆண்களின் வக்கிர பார்வை இல்லை.

இந்த பேய் சுதந்தரம் இனிமையாக இருந்தது பிரியாவுக்கு!

தான் சாகாமல், எத்துனை கஷ்டப்பட்டோம்
என்று நினைத்த பிரியாவுக்கு, உடல், அல்ல..அருவம் சிலிர்த்தது!

பிரகாஷும், தானும் தானே செத்தோம்?
இன்னும் அவன் மட்டும் வந்து சேரவில்லை?
ஒருவேளை, அவன் பிழைத்து அங்கேயே..மாட்டிக்கொண்டானோ?
பயமாக இருந்தது பிரியாவுக்கு.
இதைத்தான் பேய் காதல் என்பார்களோ?

இந்த கர்மம் பிடித்த காதல் மட்டும்
இல்லாமல் இருந்திருந்தால், மனிதர்களோடு மனிதராய்..
வாழ்ந்து தொலைந்திருக்கலாம் என்று பிரியாவின் மனதுக்கு பட்டது.

விஷ்-என்று வேகமாக ஒரு காற்று! யாரோ வருவது போல ஒரு
உணர்வு! அந்த பழைய உணர்வு! ஓ!..அவன்தான்! அவளுடைய ஆசைப்பிரகாஷ்!

அருவம்(பிரியாதான்) ஆரவாரித்தது!

வந்தது யார்? மனத்தைக் கொள்ளை கொண்ட பிரகாஷ் அல்லவா?

ஒரு மரக்கிளையில், ஸ்டைலாக, தாவி பிடித்து தொங்கினான் பிரகாஷ்.

”ஏண்டா..செல்லம்! இவ்வளவு லேட்?” -பிரியா சிணுங்கினாள்.

“ம்..ஸாரி.. பிரியா..என் உயிர் போக கொஞ்சம் லேட்டாகிவிட்டது!”

“க்கும்..நீ ஒழுங்கா, உருப்படியா எதைத்தான் செய்தே?”

“ஏய்..என்னது? நானும், நீயும் ஒண்ணாத்தானே தூக்கிலே தொங்கினேம்.
நீ.. பிஞ்சு உடம்பு. அதா..சீக்கிரம் செத்திட்ட!”

"No Excuse! பிஞ்சு உடம்பு..பிய்ஞ்சு போன உடம்புட்டு..ஏமாத்தாதே!
நாம சாகிற சமயம்தான், மாலாவும் செத்தாள்!  நீ அவ கூட பேசிட்டுதானெ வந்தாய்?”

-பிரியா பேயாய் சீறினாள்.

’பேயான பின்னரும் கூட, இந்த பெண் பேய்கள், எவ்வளவு, ஸார்ப்பா இருக்காங்க?’-பிரகாஷ்
வியந்தபடி,

“உன் தலை மேல..ஸாரி..தலைதான் இல்லையே? உங்கம்மா தலை மேல சத்தியம்!
நான் மாலாகிட்ட பேசல..பேசல..  நானே செத்து சுண்ணாம்பா வந்திருக்கேன்.
ஆசையாப்பேசாம..இப்படி எரிஞ்சு விழறயயே?”

- தன் கிளையிருந்து தாவி, பிரியாவின் கிளைக்கு வந்தான் பிரகாஷ்.

“எரிஞ்சுதானே வந்தாய் நீ!”-காதலோடு, நக்கலாய் பேய்சிரிப்பு சிரித்தாள் பிரியா!

’ஆ..இந்த சிரிப்புதானே நம்மை மயக்கி,  இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது?’

-காதலால் மயங்கிய பிரகாஷ், பிரியாவை எட்டிப்பிடிக்கப்பார்த்தான்.

பிடிக்க முடியுமா?

பேயை யாரால் பிடிக்க முடியும்???


முற்றும்!

இப்படிக்கு,
பேயன்புடன்
கருநாக்கு










ஞாபகங்கள்..

நினைவுகளின் சுமைகளால்.. கண் மூடிக் கிடந்தேன்.. 
கரைந்தன ஞாபகங்கள் கண்ணீர்த்துளிகளாய்!

அறிந்தோ..அறியாமலே.. விட்டுப்போன உறவுகள்.. 
புரையோடிய..ரணங்களாய்.. புதைந்து அறுக்கின்றன! 

Saturday, July 30, 2011

என் "ட்விட்" கள்!




1.கோழி முட்டை போடறதுனால பெயில் பண்ண முடியுமா? 
2. இந்த திங்கள், செவ்வாய் எல்லாம்.. ஒரே வாரத்திக்குள்ள வரது..
அதனால தான் வாரா வாரம் வருது! # திடீர் கண்டுபிடிப்பு
3. "பணம் ரெடி..வாங்கிக்கோ.. " # பேச்சில் இனிமை!
4.தூர இருந்தால் சேர உறவு !
இந்த கொசுக்கடியை விட.. உறவுக்கடி..ரொம்ப நெருக்கடி..
5. "ஆ" என்பது "அ" ஆனது! தமிழ் வளர்ச்சிதானே..
அதை ஒரு மழழை சொல்லும்போது!
6. அந்த காலத்தில் "பொட்டுக்கட்டியவர்கள்" போட்ட வட்டங்களை
கட்டம் கட்டி, இன்னும் தூக்கிப்போடவில்லை என்றால், நாடு முன்னேறாது!
6. ஆண்கள் தவறுகள் மறக்கபடுகிறது! பெண்கள் கூண்டிலேற்றப்படுகிறார்கள்!! நியாயமற்ற வாதங்கள்.
7.ஒரு பலாச்சுளையே பலாச்சுளையை சாப்பிட்டது!
-ஒரு பலாக்கொட்டையின் புலம்பல்!
8.ஒழுங்கா இருந்தவன் கூட கெட்டுவிடுவான்! 
கெட்டவன் கூட திருந்தி விடுவான்! # உன் அழகில்
9. கிராமத்து திண்ணைகளில் தினமும நடக்கும் "ட்விட்"களின் இனிமை  ஒரு தனி சுகம்!
10. தெருநாய்கள் குரைக்கும் தைரியத்தில்,
மேக இருட்டுக்குள் இருந்து தப்பிய நிலவு!
11. நான் உன்னக் கடிச்சேன்! நீ என்னக் கடிச்சே! 
தன்னாலே ஒரு ட்விட்டாச்சு!
12. நிலத்தை விற்றா கோலம் போடறது?
சுத்தியை விற்றா ஆணி புடுங்கறது?
13. பண்டமாற்று முறை: ஒவ்வொரு மொக்கை தத்துவத்திக்கும், ஒரு மொக்கை காதல் கவித கண்டிப்பாக அனுப்பபடும்!!
14. கடவுளை மறுப்பவன் நினைக்கிறான்! ஏற்றவன் மறக்கிறான்!
15. நீ என் கடிதத்தை கண்டவுடன் "தை..தை.." என்று குதித்ததனால் 
கடிதம் கவிதை ஆனது!
16. ..சீக்கிரம் குளித்து விடு! உன் வாசம்!!! (ஹும்.ம்)
17. நல்லா கவனிங்க..சில 'மிஸ்ஸுடு' கால்லே..எல்லா 'டிஜிட்'டுகளும் 'மிஸ்ஸிங்'கா இருக்க போகுது!
18. சாவின் விளிம்பில்.. சறுக்கி விழுந்தது மரணம்! பிழைத்தது காதல்!!!
19.அதிகாலை மைதானம்! சர்க்கரையை கரைக்கும் முயற்சியில் மெடிக்கல் டெஸ்ட்களின் நடைபயிற்சி!
20. முயல்களாய் ஓடும் அணில் குட்டிகள்!- பள்ளிமைதானம்!
21. மறதி, மனத்தின் மௌனம்! காதல் இளமையின் கௌரவம்!
வீழ்ச்சி, சபலத்தின் ஆட்சி!  வெற்றி, நட்பின் பலம்!
22. பொறாமை வியப்பின் வெளிப்பாடு!
23. நல்ல டிவிட்'க்கு ஷொட்டு!    மொக்கை டிவிட்'க்கு கொட்டு!
24. உன் பார்வைக்கு இன்னும் transliteration வரவில்லையே!#கவித
25. தன்னைத்தானெ புத்திசாலின்னு நினைப்பவன் முட்டாள்! தன்னைத்தானெ முட்டாள்ன்னு நினைப்பவன் புத்திசாலி! #கலவைதான் ட்விட்டர்ஸ்ஸ்!
26. பைட்டாக(byte) துளிர்த்த காதல் இன்று டெரா பைட்டாக மலர்ந்துவிட்டது!!
27. உன் பார்வை "ப்ளூ டூத்"தாய்..என்னுள் ஏற்றிய மென்பொருள்கள் கோடி!  
28. உன் டிஜிட்டல்(digital) பார்வையில்..நான் அனலாக்(analogue) கவியானேன்!
29. இரண்டு மௌனங்கள்..பேசாத போது.. மனங்கள் நொறுங்கும்!
30. மௌனத்தின் கர்ப்பம் துரோகமென்றால்.. மனக்கண்ணாடி நொறுங்கும்!
31. காதல் கவித எழுதி..எழுதி..நான் காதல் செய்வது, காதலிக்காகவா? இல்லை. கவிதை மட்டும் எழுதுவதற்காகவா என்று குழப்பம் வந்துவிட்டது!
32. நான் ரொம்ப பிஸி! - இதுக்கு இன்னா அர்த்தம்னா "கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன்"
33. "நான் ஃப்ரிதான்..சொல்லுங்கோ! "-இதுக்கு இன்னா அர்த்தம்னா "கோழி மாட்டப்போகுது!
34. பேச்சு பேச்சா இருந்தா..தான் பேச்சலர்!
35 அடி வாங்கினவனக்கு, அடியின் அருமை தெரியுமோ.. தெரியாதோ..அப்பா தந்த அறிவுரை ஞாபகத்துக்கு வரும்!
நம்மை சுற்றியுள்ள சுவர்கள் சிரிக்கின்றன! நம் லட்சணம் அதற்குதானே தெரியும்!!
04-Aug-2011
36. எல்லா வழிகளும் இறைவன் அமைத்தவை! உன் வழி..என் வழி..என்பது நாம் வகுத்தவை! வலிகளும் அவ்வண்ணமே!
37. உழைக்கிற உடம்பு களைக்காது! வீணா பிழைக்கிற வாழ்க்கை நிலைக்காது!
38. காண்டா மிருகத்திற்கு போண்டா வாங்கித்தரமுடியாது!
கள்ளு குடிச்சா வீடு போய் சேர முடியாது!
38. சிரித்தாள்! ஒளி வெள்ளம்!
39. நடந்தால் திருவிழா! நீ..சுனாமிப்பேரழகி!!
40. "டர்ங்..கிது..புர்ங்..கிது.." இதுக்கு இன்னா அர்த்தம்? பயந்தவன் புட்டுகுடுவா"
41. ஒரு குழந்தைமேல் வர்ற இயற்கையான அன்பு போலத்தான் உண்மையான காதலும்!
42. ரெண்டு காலே இல்லாமல் "ஒத்தை கால்" லே நிற்கிறானே அவன் தான்டா வீரன்! #கண்டுபிடிப்பு
43. சோப்பு போட்டு குளிச்சா அழுக்கு போகுமோ போகாதோ.. சோப்பு போடலைன்னா புரமோஷன் கண்டிப்பா போயிடும்! #கண்டுபிடிப்பு
44. யாணை மேலே போனாலும் பூனை 'மியா..மியா' ன்னுதான் கத்தும்!#கண்டுபிடிப்பு
45. கால் கடிதாசி எழுத அரை நாள் யோசிச்சு முழுநாள் வீணாப்போச்சு!
05-Aug-2011
46. உன் வளையலோசையில் என் வாலிபம் தொலைந்தது!  
47. உன் மேனி நிறம் காண மேகக்குவியலும் ஆசை கொள்ளும்!
48. நீ போடும் எட்டுப்புள்ளி கோலங்களில்தான் எத்தனை கவிதைகள்!
49. உன் விழிப் புருவம் கோணம் காண வானவில்லும் முயற்சி செய்யும்!
50. உன் வீட்டு பால்கனியில் மட்டும் ஏன் நிலவு அடிக்கடி எட்டிப்பார்க்கிறது?
51. உன் வீட்டு ஜன்னலில் அடிக்கடி மின்னல்!
52. என் வீட்டு வாசல்கதவில் உன் வாசம் ஒட்டிருக்கிறது!
53. வாழ்க்கையில் வாழாதவங்களும் வாழ்ந்திட்டுத்தான் இருக்காங்க!
06 to 12-Aug-2011
54. மணம் என்பது மனம் மாற அல்ல!  
55. நிஜத்தை நிர்வாணமாக்கி.. கட்டணமின்றி சுமந்து செல்லும் என் கனவுகள்!
56. காலத்தேவதையின் ஜாலப்பூவலையில் கட்டுண்டு, கசிந்துருகும் கண்ணீர் திவலைகள்!
57. கொணடாட தெரியாதவர்கள் பெறும் வெற்றி, செவிடன் கையில் கிடைத்த ஆடியோ சி.டி போல.
58. கசாப்புகாரன் ஒரெ அறுப்பிலே முடிச்சுடரான் ஜோலிய..இங்க அப்படியா?
59. இன்றைய தலைமுறையினர், தமிழ் கற்க, 1975 to 1980 பாட்டுகள் கேட்டாலே போதும். அமெரிக்கவாழ் தமிழர்க்கு வேண்டுகோள்!
60. உன் கண்கள் சொல்லிய கவிதைகள்தான் என் நெஞ்சின் உணர்வலைகள் ! 61. உன் சுவாசம் தான், இந்த காற்றில் கலந்த உயிரலைகள்!!
62. உன் கண்வீச்சு அணு உலை கதிர்வீச்சையும் அடக்கி விடும்!
63. உன் வீட்டு ஜன்னல், என்ன மின்னலுக்கு போட்டியா?
64. உன் கால் கொலுசு சப்தங்கள், என் கனவுகளில் வாழும் சந்தங்கள்!
65. சட்'டென்று திரும்பினாய் நீ! பொட்'டென்று விழுந்தது என் மனது!!
66. உன் நினைவுகளை, என் நினைவுகளால் அழிக்கமுடியவில்லை!
67. ஒரு நல்ல மனிதர்க்கான எல்லாத் தகுதியும் படைத்தவர் தல! அவரை குறை சொன்னா வழுக்கையாகும் உன் தலை!#மங்காத்தா
68. பாராட்டத்தெரியாத உலகத்தில் பைத்தியகாரன்தான் தலைவன்!
69. ..படாது என்றாலும் படுத்துகின்றன சில ஞாபகங்கள்!
70. வாய்மையே வெல்லும் என்றால், பொய்மை ஏன் ஆனந்த கூத்தாடுகிறது?
71. அதிகாலையிலே. நீ புள்ளிகளை சிறை வைக்கும் கோலங்கள் இடுவது முறையா?
72. பணி நிமித்தம் பணிவதற்க்கும், பணிமூப்புக்காக குனிவதற்கும் சுமார் ஆறு வித்தியாசங்கள் உள்ளன!
73. உங்கள் முகம் அழுக்குப்படும் போது, முதலில் முந்தானையில் துடைத்துவிடுவது, உங்கள் மனைவிதான்!
74. நாலு பேரு நல்லா இருக்குணும்னா..ஒரு டிவிட்' பண்ணறது தப்பே இல்லை!!!
75. இட ஒதுக்கீடு பிரச்சனையை தீர்க்க ஒரே வழி..ம்..ம்..ம்.. நிறைய இடம் வாங்கணும்! விலை என்ன ஆனாலும் பரவாயில்லை!
76. உன் கன்னம் சிவந்தால் பா.விஜய்யும் பைத்தியமாவான்! அந்த வைரமுத்துவும் பித்தனாவான்! வாலியும் வழுக்கிவிழுவான்! கண்ணதாசனும் கதறி அழுவான்!
77. நீயில்லை என்று நினைத்தாலே, இதயத்தில் 7.8 ரிச்ச்ர்ட்ஸில் நடுக்கம் ஏற்படுகிறது!
78. சலவைக்கு போட்டு நாலு நாளாச்சு! துவைச்ச துண்டும் ரெண்டாச்சு! CBI காரன் வந்தாச்சு! ஆவணம் ஒண்ணும் சிக்கல! கோவணம் இன்னும் காயல!!
79. உன் கணிணி, கன்னியுன் கண்ணைப்பார்த்த பின்னரும் இயங்குவது என்ன அதிசயமோ?
80. உன் முத்தத்திற்கு நான்தானே மொத்த குத்தகை!
81. உன் 'இச்'சுக்கு இணையான கவிதை.... இது வரை எவனும் எழுதியது இல்லை!!!
82. உன் கூந்தல்தானே..நக்கீரனையும் பொய்யனாக்கியது?
83. உன்னைப்பார்த்த பின்னர்தான்... ஆச்சர்ய குறி உயிர் பெற்றது!!
84. ராமன் சீதைக்காக வில்லெடுத்தான்! உன் மாமன் உனக்காக சொல் தொடுத்தான்!!
85. 


































Friday, July 29, 2011

குலப்பெண்!

வாசல் பெருக்கி கோலம் போட்டாங்க!
வாசம் வச்ச பூவோடு வளய வந்தாங்க!
மாமன்முறை வந்தாக்க..
வளையல் சத்தம் தந்தாங்க!
தாவணி போட்டாங்க!  தண்ணீர் குடமெடுத்து 
தழைய வந்தாங்க!
கண்மையெடுத்து புருவம் வச்சாங்க!
கண்களில் மட்டும் காதல் சொன்னாங்க!
பரிசம் போட்ட மாமன் மேலே
பாசம் வச்சாங்க!
வீரம் பார்த்தாங்க!   நல்ல நேரம் பார்த்தாங்க!
தவமாயிருந்தாங்க!  தாலி கேட்டாங்க!
வம்ஸம் விட்டு வம்ஸம் வந்தாங்க!
பெற்ற தாயை விட்டாங்க! தந்தையை மறந்தாங்க!
வளர்ந்த வீட்டிலே.
பழகிய பாசம்..பல நாள் நேசம்
விட்டுச்சென்றே..இல்லை..சுட்டுக்கொன்றே..
கொண்டவனை கொண்டாடி நின்னாங்க!
குணமாய் வாழ்ந்து குங்குமம் காத்தாங்க!
கொண்ட குலம் வளர்த்தாங்க!

காலம் மாறிப்போச்சு!
காதலும் மாறிப்போச்சு!
காசு பணம் பார்த்த பின்னே
கால்கட்டு போடுறாங்க!
கட்டும் நிக்கலே..வைச்ச
பொட்டும் ஒட்டலே!
குடும்பம் குறுகிப்போச்சு!
நம்ம குலமும் கருகிப்போச்சு!!!

Wednesday, July 27, 2011

ரோஷம்...




அளவாக இருந்தால் அது ரோஷம்!
அளவு குறைந்தால் தோஷம்!
மானத்தை மாசுபடாது காக்கும் கவசம்!
ஆனால்..
வீட்டுக்குள் ரோஷம், சோற்றிலிட்ட விஷம்!

Tuesday, July 26, 2011

விவாக ரத்துக்கள்!


மணந்த பின்னே மணம் மாறும்!
மனமின்றித்தடுமாறும்!
ரத்த உறவுகளையும் ரத்தாக்கும்!
மணம் குன்றி மரணிக்கும்!

உறவுகளை உருக்குலைத்து
உயிரோடு ரணமாக்கும்!
மழழை மொழிக்குழந்தை ..
மௌனத்தில் தத்தளிக்கும்!

மஞ்சள்கயிறுகளை
மஞ்சள்பத்திரிக்கை சேகரிக்கும்!
அந்தரங்க வாழ்க்கையெல்லாம்
அற்பர்தம் வாய்  உச்சரிக்கும்!

மூன்று முடிச்சுகள் முச்சந்தியில்
முகம்சுளிக்க அவிழ்க்கப்படும்!
 
எந்த ஊரும் உன் பேர் மதியாது!
உன் எச்சில் கூட
எச்சில் இலையில் பதியாது!

சேமிப்பு!



எதிர்காலத்துக்காக

நிகழ்காலத்தை

தொலைப்பவர்கள்!

கனவுக்காக..
 

தூக்கத்தை இழப்பவர்கள்!

Monday, July 25, 2011

கோபம்..

கோபத்தில்..

துள்ளி விழுந்தன
வார்த்தைகள் மீனாய்!

உலர்ந்தன உறவுகள்
காய்ந்த கருவாடாய்!!

பொய்யோ நீ!

நம்மைத்தொட்டு..
விட்டுச்சென்ற காற்று!

நடந்த பாதைகள்!
புல்வெளி நினைவுகள்!

கண்மூடினாலும்..
கசிந்தது கண்ணீர்..

பொய்யோ நீ!

Sunday, July 24, 2011

நீ ஏன் தேய்கிறாய் நிலா!



என் அழகைக்கண்டு..
ஏன் தேய்கிறாய் நிலா!

ஒவ்வொரு மாதமும்..
உன்னுடன்..இதே..
ரோதனைதான்!

இங்ஙனம்: பூமி மங்கை

Race dive in Swimming pool

என் மகர்(ன்) அடித்த ரேஸ் டைவ்!
பழைய காமிரா தான்! ப்ளான்  செய்து எடுக்கலெ.. ஸ்ட்ரீம் லைன் பொஸிசன்!
Stream line position demonstrated.

பழமொழி வந்த கதை!


"பெரிய பருப்பா"ங்ற  பழமொழி வந்த கதை!


ஒரு நாள் கடலைப்பருப்புக்கும்
துவரம்பருப்புக்கும் சண்டை! 
ரெண்டுமே வேகலை! 
சமையலும் ஆகலை!!

என் ட்விட் கவித..

அரை டவுஸரு டேட் போகுது! 
அப்பா டக்கரு அவுட்-டேட் ஆகுது!

அன்பே! நீ ஒளிந்து கொள்! 
பத்மநாப சொத்து கணக்கில் உன்னையும் சேர்த்து விட போகிறார்கள்!!

தேங்கா மரத்துக்கு மாங்கா மரம் தேவல! 
அத்தை மவ ஆக்கித்தந்த அயிரக்குழம்பு போதலே!

 

கவித குழம்பு!




அன்பே!..உன் தலைப்பேன் கூட.. எனக்கு..தலைப்பு செய்திதான்! 

நீ என்னுடன் இருந்தால் " கொட்டாவி" கூட மிட்டாய் தான்!

உன் அழகில் மயங்கி ..பைத்தியத்துக்குகூட 
பைத்தியம் பிடித்து விடுமோ? 

நான் பல் விளக்கப்போகும்போது கூட உன் பல் ஞாபகந்தான்!

உன் காதலில் மயங்கி பர்ஸு கூட.. எடுக்காமல் நான் வந்துட்டேன்.. 
மாவாட்ட சக்தியில்லே கண்ணே!!!

உன் மனம் புழலாய் இருந்தால்.. குண்டர் சட்டமும் எனக்கு தூசிதான்!!

அணு உலையில் போட்டு வறுத்தாலும்..நீயும் நானும் அய்ஸோடோப் (Isotope) தான்!

ஆண்களுக்கு அழகு பாங்க் பாலன்சு.. 
பெண்களுக்கு அழகு அதை மின்னல் வேகத்திலே கரைப்பது!!!














தெரு வாழ்க்கை!

தினமும் குளியல்!
நடை-பயிற்சி நாலு கால் பாய்ச்சலில்!
தனிக்கூண்டு!
கழுத்தில் அழகுப்பட்டை!!
எஜமானி செல்லம்!





இருந்தும் சங்கிலி..
கண்கள்  என்னவோ தெரு நோக்கி....
சுதந்தரமாய் திரியும்  தெரு நாய்கள்..
அத்தனையும் குடும்பமாக.. ஓ!
அதுவல்லவோ வாழ்க்கை!!!

மாயமான்கள்!

"மாயமான்"கள் தொல்லைகளால்
மாயமாகும் கோடுகள்!!

புனிதம் மறந்த
பூச் சறுகுகள்!

மஞ்சத்தில் மரிக்கும்
மஞ்சல் கயிறுகள்!!

 
மோகத்துக்கு வெட்கமில்லை!
வேகம் விவேகமில்லை!!

Saturday, July 23, 2011

வழுக்கு மர விளையாட்டு!

வாழ்க்கை என்பது ஒரு வழுக்கு மர விளையாட்டு!
வெற்றி காண முடியாத வெற்றிடங்களால்
விளையாட்டாய் தொடங்கி..
என்ன என்று புரியுமுன்னெ..
முடிந்துவிடும்!
நேற்று..இன்று..நாளை..என்று
அடுக்கி வைத்த அழகு என்னே!
உடம்பு, மனம், மூளை என்று
பிரித்து நம்மை சிறைக்குள் அடைத்த
அருமை என்ன?
நான்..நீ..வீடு..நாடு..அவள்..அது..
பணம்..பற்று..பதவி..கொள்ளை..கொலை..
எவ்வளவு..சிக்கல்!!!
இறைவனை நான் அறியேன்!
இயற்கையே..நீ வைத்த இந்த
வழுக்கு மரப்போட்டி
எத்தனை பேரை வாழ வைக்கிறது!!!

"அணு" சொல்லும் தத்துவம்!

அணுவை ஆராய்ந்தாலெ வாழ்க்கை தத்துவம் புரியும்.
புரோட்டானை பைத்தியமாய் எலெக்ட்ரான் சுற்றி வருவது ஏன்?

எலெக்ட்ரான், புரோட்டானை விட எடை குறைவு!
எலெக்ட்ரான், புரோட்டானை பிரித்தால் கடுப்பு ஆயுடும் அணு!

புரோட்டானை ஃப்ரீயா இருக்க உடாது எலெக்ட்ரான்!
நுயுட்டரான் மாமாதான் குடும்பத்திக்கு வெய்ட்டு!

சும்மா..படிக்க..கவித!

ஒட்டகத்தை யாரும் கொட்ட முடியாது! 
கோந்து கொட்டி போனா..ஒட்ட முடியாது!!

என் காதலுக்கு ஈடு இணை கிடையாது! 
ஒரு தலைக்காதல்!

நகத்தை நறுக்கித்தா.. சேமிக்கிறேன்! 
நீ நடக்கும் தெருவைச் சொல்! பூஜிக்கிறேன்!

மின்னல் நாணியது உன் கண்பட்டு!
தேனும், திகட்டும் தினை மாவும்
திகைத்தது உன் இதழ்பட்டு!!

உன் வரவே என் வரம்!
நம் உறவே என் உயிரின் உரம்!!

கருவிழியோ? காமக்கதிர் ஒளியோ?
பெருகிடும் காதல் வலியோ?சகி நீ செய்யும் சதியோ?
இல்லை..நீயுட்டனின் விதியோ? 

உன் 'யுரேனியப்'பார்வையிலே..
காதல் நுயுட்ரான்கள்..
நொறுங்கி உயிர்த்தன.. பல கோடி!

கூடல்கள் மெச்சப்படாதநேரங்களில்..
காதல் அச்சப்படும்!

ஹைக்கூ கவிதைகள்
 பல சமயம் செய்திடும் பெருந்தொல்லை!
சில சமயம் இதயத்தையடித்திடும் கொள்ளை!!